வெந்து தணிந்தது காடு, மல்லிப்பூ சாங்… ரைம்மிங்காக பாராட்டிய யுவன்: ப்ரதருக்கு நன்றி சொன்ன சிம்பு

சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார்.

வெந்து தணிந்தது காடு பட ஆடியோ ரிலீஸில் சிம்புவிற்காக கலந்து கொண்டேன் என யுவன் சங்கர் ராஜா அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை பாராட்டி யுவன் ட்வீட் செய்துள்ளார்.

கோலிவுட்டின் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்

கோலிவுட்டின் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்

சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா இருவரும் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த வெற்றிக் கூட்டணி என ரசிகர்களால் கொண்டாடப்படுவது உண்டு. மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், மாநாடு என மாஸ் ஹிட் பங்களை கொடுத்துள்ள இந்தக் காம்போ மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் யுவன் கலந்துகொண்டிருந்தார். அப்போ பேசிய யுவன் "சிம்பு போன் போட்டு வரச் சொன்னார், வந்துட்டேன் இதுதான் எங்கள் நட்பு" என செம்ம க்யூட்டாக கூறியிருந்தார்.

சிம்புவுக்கு ட்வீட்டரில் வாழ்த்து

சிம்புவுக்கு ட்வீட்டரில் வாழ்த்து

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விமர்சன ரீதியாகவும் கலக்கி வரும் வெந்து தணிந்தது காடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனிடையே யுவன் சங்கர் ராஜா ட்வீட்டரில் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படம் பற்றி மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்டு வருவதாகக் கூறி சிம்புவை வாழ்த்தியுள்ளார்.

ரிப்பீட் மோடில் மல்லிப்பூ சாங்

ரிப்பீட் மோடில் மல்லிப்பூ சாங்

யுவனின் அந்த ட்வீட்டர் பதிவில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப்பூ' பாடல், பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. தாமரையின் வரிகளும் மதுஸ்ரீயின் குரலும் ரஹ்மானின் வெரைட்டியான இசையில் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துவிட்டது. இந்தப் பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு வருவதாக கூறியுள்ள யுவன், ஏஆர் ரஹ்மானுக்கும் 'வாழ்த்துகள் சார்' என பையரிங் கேப்ஷன் போட்டுள்ளார்.

யுவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

யுவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜாவும் ட்வீட்டரில் ரைம்மிங்காக வாழ்த்தியுள்ளார். யுவனின் இந்த ட்வீட்டை சிம்புவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு வாழ்த்து சொன்ன யுவனின் ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள நடிகர் சிம்பு, 'நன்றி ப்ரதர்' என ரீப்ளை செய்துள்ளார். இதனால், யுவனின் ரசிகர்களும் தற்போது ஹேப்பி மோடில் உள்ளனர். கடந்தாண்டு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திற்கு யுவன் தனது இசையால் மேஜிக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X