மாஷா அல்லா.. சிம்புவின் மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ தெரியுமா? யுவன் தந்த மாஸ் அப்டேட்!
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் என்பது குறித்து ட்வீட் போட்டு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் அரசியல் ஆக்ஷன் டிராமா படம் தான் மாநாடு.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில்
சிம்புவின் மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். யுவனின் இசையில் பாடல்கள் எல்லாம் வேற லெவலில் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லாக்டவுன் மட்டும் போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் படத்தையே ரசிகர்கள் பார்த்து யுவனின் பிஜிஎம்மை கொண்டாடி இருப்பார்கள்.

மாஷா அல்லா
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என்கிற அசத்தலான அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிம்பு ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார். மேலும் #mashaAllah என ஹாஷ்டேக் போட்டிருப்பதால் முதல் பாடலின் டைட்டில் மாஷா அல்லா என்பது உறுதியாகி உள்ளது.

இஸ்லாமிய இளைஞர்
மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிம்பு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரப் பெயர் அப்துல் காலிக் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு படத்தின் வித்தியாசமான டீசரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் படமான டெனெட் படத்துடன் ஒப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ஸ்பேஸ்
வரும் ஜூன் 21ம் தேதி மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ள நிலையில், அது தொடர்பான ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியை ஜூன் 20ம் தேதி இரவு 7 மணிக்கு படக்குழுவினர் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யுவன், சிம்பு மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











