மீண்டும் யுவனின் ரீமிக்ஸ் மேஜிக்...அட்டகாசமாக வந்த ரம்பம்பம் ஆரம்பம்...அதுவும் இந்த படத்தில்
சென்னை : யுவனின் அடுத்த மேஜிக் வெர்ஷனாக வெளிவந்திருக்கிறது ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் பாடலின் ரீமிக்ஸ். இளையராஜா இசையில் உருவான மற்றொரு பாடலையும் யுவன் தற்போது ரீமிக்ஸ் செய்துள்ளார்.
இளையராஜாவின் திரையுலக வாரிசான யுவன்சங்கர் ராஜா, சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் முலம் சினிமாவிற்கு வந்தார். தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பல ஹிட் பாடல்கள், பிஜிஎம் இசையை தந்த யுவன், பல முக்கியமான படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தில் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்தவர், அவரின் பல சுப்பர்ஹிட் பாடல்களை தான் இசையமைக்கு படங்களில் ரீமிக்ஸ் செய்து வருகிறார்.

பட்டையை கிளப்பும் ரம்பம்பம் ரீமிக்ஸ்
தற்போது ஃபுல் ஃபார்மில் இருக்கும் யுவன் ஆல்பம், இசைநிகழ்ச்சிகள், பேட்டிகள், படங்கள் என படுபிஸியாக இயங்கி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது அப்பாவானா இளையராஜா இசையமைத்து கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற 'ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்' பாடைல ரிமீக்ஸ் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

எந்த படத்தில் வருது இந்த பாடல்
இந்தப்பாடல் பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கி வரும் காஃபி வித் காதல் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், டிடி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், மிர்தா ஐயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய காமெடி படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுக்கு 100 மில்லியன் லைக்ஸ்
ஏற்கனவே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் 'கை வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடலை சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்திற்கு ரீமிக்ஸ் செய்து யுவன் வெளியிட்டு இருந்தார். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

எத்தனை ரீமிக்ஸ்
இதற்கு முன் குறும்பு படத்தில் ஆசை நுறு வகை பாடல், மங்காத்தா படத்தில் ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் போன்ற இளையராஜாவின் பல ஹிட் பாடல்களை யுவன் தான் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்தி, பழைய பாடல்களை மீண்டும் ஹிட் அடிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரம்பம்பம் பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ளார்.

ரீமிக்ஸ் கிங் ஆகிறாரா யுவன்
பிஜிஎம் கிங் என பெயர் வாங்கிய யுவன், தற்போது ரீமிக்ஸ் கிங் என்றும் பெயர் வாங்கி வருகிறார். இளையராஜா இசையில், மறைந்த பாடகர் எஸ்பிபி.,யின் குரலில் உருவான ரம்பம்பம் ஆரம்பம் பாடலை மீண்டும் புதிய வடிவில் கேட்ட உற்சாகத்தில் 90 ஸ் கிட்ஸ் உள்ளனர். தற்போதைய தலைமுறையிடமும் இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

யுவனுக்கு நன்றி சொன்ன படக்குழு
இந்த பாடலுக்காக யுவனுக்கு படக்குழு நன்றி சொல்லி உள்ளது. யுவன் இசையில் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளது மகிழ்ச்சியான புது அனுபவத்தை தருவதாக டிடி குறிப்பிட்டுள்ளார். ஜீவாவுடன் நடனமாடியது சந்தோஷமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











