»   »  விரைவில் அப்பாவாகப் போகும் யுவன் சங்கர் ராஜா!

விரைவில் அப்பாவாகப் போகும் யுவன் சங்கர் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா தம்பதிகள் விரைவில் பெற்றோராகப் போகின்றனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன் சங்கர் ராஜாவுக்கும் துபாயைச் சேர்ந்த ஜபருன்னிசாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.

Yuvan Shankar Raja will become dad soon

ஏற்கெனவே இருமுறை திருமணமாகியிருந்தாலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு குழந்தை பிறக்கவில்லை.

இப்போது முதல் முறையாக தந்தையாகிறார் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் ஒரு படத்தின் பிரிமியர் காட்சிக்கு மனைவி ஜபருன்னிசாவையும் அழைத்து வந்தார் யுவன். அவரிடம் ஜபருன்னிசா தாய்மை அடைந்துள்ளது குறித்து கேட்டபோது, "ஆமாம்.." என்றார். பின்னர் விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று விடை பெற்றார் யுவன்.

யுவன் இப்போது ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் புதிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

English summary
Yuvan Shankar Raja will be a dad for the very first time. The 36-year-old composer, who got married to a Dubai-based Zafrun Nizar in January earlier this year, has put all speculations to rest by telling us during a chat that his wife is expecting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil