இளையராஜா வரிகளில் யுவன் பாட்டு பாடியிருக்காரா... சூப்பரப்பு!
சென்னை : இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வருகிறது நினைவெல்லாம் நீயடா.
Recommended Video
பிரஜன், மனிஷா யாதவ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் படத்தை எழுதி இயக்கி வருகிறார் ஆதிராஜன்.
இந்தப் படத்திற்கு மேலும் ஒரு சிறப்பாக மற்றொரு அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நினைவெல்லாம் நீயடா படம்
பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, தேனப்பன், மதுமிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் நினைவெல்லாம் நீயடா. ஆதிராஜன் எழுதி இயக்கிவரும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகிவருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கதைக்களமாக பள்ளிக் காதல்
பள்ளிக் காதலை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்திற்காக 5 பாடல்களை இளையராஜா உருவாக்கியுள்ளார். படத்தில் அவரது இசையில் பழநிபாரதி எழுதிய மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் என்ற பாடலை பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் பாடியுள்ளார்.

இளையராஜா வரிகளில் பாடிய யுவன்
கவிஞர் சினேகனும் 3 பாடல்களை எழுதியுள்ளார். இதனிடையே படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் படத்தில் யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை இசைஞானி இளையராஜா எழுதியுள்ளார். இது படத்திற்கு மிகப்பெரிய ப்ளசாக பார்க்கப்படுகிறது.

இளையராஜாவை பார்த்து பயந்த இயக்குநர்
இதனிடையே இசைஞானியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு இந்தப் படத்தின்மூலம் நிறைவேறியுள்ளதாக இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார். தான் ஆரம்பத்தில் இளையராஜாவை பார்த்து பயந்ததாகவும் ஆனால் அவர் தட்டிக் கொடுத்து தேவையானதை கேட்டு இசையமைத்து தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடல் எழுதி தந்த இளையராஜா
இந்தப் படத்திற்காக அவரை ஒரு பாடல் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் உடனடியாக சம்மதித்த இசைஞானி இதயமே என்று துவங்கும் பாடலை எழுதிக் கொடுத்ததாகவும் தொடர்ந்து இந்தப் பாடலை யுவன் அசத்தலாக பாடியுள்ளதாகவும் ஆதிராஜன் கூறியுள்ளார். அவருடன் மும்பையை சேர்ந்த ஸ்ரீஷா என்ற பாடகி பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

150 படங்களில் இசை
இசைஞானி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த 25 ஆண்டு தன்னுடைய இசைக் கேரியரில் 150 படங்களுக்கு மேல் யுவன் இசையமைத்துள்ளார். கடந்த 1989லிருந்து பாடி வருகிறார். இதுவரை 150 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

ரசிகர்களை மயக்கும் மாயக்குரல்
இவரது காதல் ஆசை யாரை விட்டதோ, அந்த கண்ண பார்த்தாக்கா, நாங்க வேற மாதிரி உள்ளிட்ட பல சமீபத்திய பாடல்கள் யூடியூபில் ஏராளமான மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்து வருகின்றன. ரசிகர்களை மயக்கும் மாயக்குரலுக்கு சொந்தக்காரராக யுவன் காணப்படகிறார். ஆனால் தன்னுடைய தந்தை எழுதிய பாடலை யுவன் பாடியுள்ளது இதுவே முதல் முறை.

இறுதிக்கட்டத்தில் படம்
லேகா தியேட்டர்ஸ் சார்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று இயக்குநர் ஆதிராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் படம் வரும் மே மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











