யுவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுவான்: இயக்குனர் ஓபன் டாக்

By Siva

சென்னை: யுவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுவான் என்று இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது யுவனின் 125வது படம் ஆகும்.

இரும்புத்திரை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது,

அதிரடி

அதிரடி

ட்ரெய்லர் அதிரடியாக இருந்தது. டீஸர் ரொம்ப நன்றாக இருந்தது. தற்போது எல்லாம் விஷால் எல்லாமே அதிரடி தான். உண்டு இல்லைனு பண்ணுகிற ஒரே வேலை அவர் தான் செய்கிறார்.

இசைஞானி

இசைஞானி

ரொம்ப நாட்கள் கழித்து நான் யுவனை பார்க்கிறேன். யுவனை பற்றி சொல்ல நிறைய இருக்கு. நான் அவர் அப்பாவின் தீவிர வெறியன், ரசிகன். சில நேரம் இசைஞானியின் வீட்டில் கம்போசிங் நடக்கும். அப்போது யுவன் என்னுடன் சண்டை போடுவான்.

டியூன்

டியூன்

அவன் ஒரு குட்டி கீபோர்டை வைத்துக் கொண்டு அங்கிள் இந்த டியூனை கேளு கேளு என்பான். இவன் மிகப்பெரிய ஆளாக வருவான் அக்கா என்று அவன் அம்மாவிடம் அப்பொழுதே சொன்னேன்.

திறமை

திறமை

இவன் சாதாரண ஆள் இல்லை. குட்டியாக இருந்து கொண்டே என்னை டார்ச்சர் பண்றான். ஆனால் அழகாக டியூன் போடுவான். அப்பொழுதில் இருந்தே டார்ச்சர் தான்.

மித்ரன்

மித்ரன்

சின்ன கவுண்டர் கதையை கேட்பாங்க. நானும் அவர்களிடம் கதை சொன்னால் ஓஹோ, அப்புறம் என்று கிண்டல் செய்வாங்க. எப்படி மித்ரன் கதையை கேட்டு நக்கல் அடிக்காமல் இருந்தான் என்று தெரியவில்லை.

சண்டைக்கோழி

சண்டைக்கோழி

இந்த படம் விஷாலுக்காக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பழகிவிட்டால் தன் நண்பர்கள், நம்புகிறவர்களுக்காக தன்னை அர்பணிக்கும் பாசக்காரன் தான் சண்டைக்கோழி என்றார் ஆர்.வி. உதயகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X