கார்த்தியின் கொம்பனிலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!
சென்னை: கார்த்தி- லட்சுமி மேனன் நடிக்கும் கொம்பன் படத்திலிருந்து விலகினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகும் புதிய படம் கொம்பன். 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார். ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிராமத்துக் கதை
இப்படத்தில் கார்த்தி முதல் முறையாக பெரிய மீசை வைத்து நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடத்தி வருகின்றனர்.

யுவன்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

ஜீவி பிரகாஷ்
யுவனுக்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கொம்பன் படத்தில் இசையமைப்பதை ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏன்? ஏன்?
பருத்திவீரனுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் கிராமத்து படம் என்பதால், அப்படத்திற்கு இசையமைத்திருந்த யுவனேயே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், இப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

வடகறிக்குப் பிறகு
ஏற்கெனவே வடகறி படத்துக்கு யுவன் இசையமைப்பதாக இருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











