ஆம்பள படத்திலிருந்து வெளியேறினார் யுவன்!

By Shankar

விஷாலும் யுவன் சங்கர் ராஜாவும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான். விஷாலின் அடுத்த படமான பூஜை, அவர் முதல் முதலாக தயாரிக்கும் நாடகத்துக்குக் கூட யுவன்தான் இசை அமைக்கிறார்.

ஆனால் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ஆம்பள படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் யுவன். அவருக்குப் பதில் 5 இசையமைப்பாளர்கள் அந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர்.

சரிப்படவில்லை

சரிப்படவில்லை

இந்த வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. சுந்தர் சிக்கும் இவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் சுந்தர் சியின் பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன்.

5 இசையமைப்பாளர்கள்

5 இசையமைப்பாளர்கள்

இப்போது ஆம்பள படத்தின் இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிமுகமாகிறார். ரஹ்மானின் உதவியாளர் ஒருவரும் இசையமைக்கிறார். மேலும் 3 புதிய இசையமைப்பாளர்களையும் இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறார் சுந்தர்.

முதல் முறையாக

முதல் முறையாக

தமிழ் சினிமாவில் முதல் முதலாக 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தவர் இயக்குநர் வசந்த். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் 5 பேர் இசையமைத்தார்கள்.

பார்த்திபனும்

பார்த்திபனும்

அடுத்து இயக்குநர் பார்த்திபன் தன் கதை திரைக்கதை வசனம் இயக்கத்திலும் 5 இசை அமைப்பாளர்களைப் பயன்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

முனி 3லும் 5 பேருங்க..

முனி 3லும் 5 பேருங்க..

இதே போல ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி 3-ம் பாகமான கங்காவிலும் 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.

போற போக்கைப் பாத்தா, ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாட்டுதான் என்ற நிலை வந்துவிடும் போலிருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X