யுவனின் மாஸ் இசையில் ஜொலித்த அஜித்
யுவனின் இசையில் அமைந்த அஜித்தின் வெற்றிப்படங்கள்
சென்னை: அஜித்தின் ஹிட் படங்களில் யுவன் ஷங்கர் ராஜா மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளார்.
ரீமிக்ஸ் கிங், பிஜிஎம் கிங் என அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அஜித்தின் மாபெரும் வெற்றிப்படங்களான தீனா, பில்லா, மங்காத்தா ஆகியவற்றில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்.

தீனா திரைப்படத்தில் தான் கதாநாயகனுக்கு தனி தீம் ம்யூசிக் என்ற ட்ரெண்டை அறிமுகம் செய்தார் யுவன். அஜித் ஆக்ஷனுக்கு தயாராகும்போது ப்ளே ஆன தீம் ம்யூசிக் புதுமையாக இருந்தது. அதன் பிறகே மற்ற இசையமைப்பாளர்கள் அந்த பாணியை பின்பற்ற ஆரம்பித்தனர்.
அஜித் யுவன் கூட்டணி என்றால் தெறிக்கவிடும் பிஜிஎம் நிச்சயம் என்பது பில்லா திரைப்படத்திற்கு பிறகு முடிவானது. ஆனால் பில்லா தீம் ம்யூசிக்கை மெனக்கட்டு உருவாக்கவில்லை. நான் மீண்டும் நானாக வேண்டும் பாடலில் வரும் சிறிய பிட் யுவனுக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கும் பிடித்துப் போனதால் அதையே தீம் ஆக செட் செய்தனர். அஜித் ரசிகர்களைத் தாண்டி பலராலும் கொண்டாடப்பட்டது.
எப்போதும் ஒரு படத்தின் இரண்டாவது பகுதி எடுக்கும்போது, முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதற்காக அதிக மெனக்கடல் தேவைப்படும். அப்படி ரிலீஸ் ஆன பில்லா 2 திரைப்படத்தில் பில்லாவில் பயன்படுத்தப்பட்ட அதே தீம் ம்யூசிக்கை மெருகேற்றி தீம் ஆக பயன்படுத்தினார். அதுவும் ஹிட் அடித்தது.
மங்காத்தா திரைப்படம் ஏழாம் ஆண்டு கொண்டாட்டத்தில் யுவனின் பங்கு அளப்பறியது. இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் லெவலில் இருந்தது மங்காத்தா தீம். வினாயக் மகாதேவ் நடந்துவரும் காட்சியை ம்யூட் செய்துவிட்டு பாருங்கள். யுவனின் மேஜிக் உங்களுக்கு புரியும்.


Click it and Unblock the Notifications











