Yuvan: "தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியா..?” அசால்டாக கேட்ட சதீஷ்... யுவன் கொடுத்த பல்பு!
சென்னை: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை யுவன் ஷங்கர் ராஜா ரெடி செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கன்ஜூரிங் கண்ணப்பன் ப்ரொமோவில், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி யுவன் அப்டேட் கொடுத்துள்ளார்.

தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி
லியோவில் நடித்து வரும் போதே தனது 68வது படம் குறித்து அபிஸியலாக அறிவித்தார் விஜய். அதன்படி தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியானது. முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் பூஜை வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பூஜை வீடியோவுக்கு சூப்பரான பிஜிஎம் கொடுத்த யுவன், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் கம்போஸ் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தளபதி 68 முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில், ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் ஷூட் செய்யப்பட்டதாம். ராஜூ சுந்தரம் கோரியோகிராஃபில் விஜய்யின் தரமான டான்ஸ் ட்ரீட்டாக இந்தப் பாடல் இருக்கும் என்பது கன்ஃபார்மாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவும் இந்தப் பாடல் தர லோக்கலில் இருக்கும் என கல்லூரி விழா ஒன்றில் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்பின்னர் மீண்டும் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். சதீஷ், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா, ரெடின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கன்ஜூரிங் கண்ணப்பன். ஏஜிஎஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் கன்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'Nobody Sleeps Here’ என்ற பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. அதற்காக யுவன், சதீஷ் இணைந்து நடித்துள்ள ஜாலியான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகிட்டதா அர்ச்சனா கல்பாத்தி சொன்னாங்க. அத ஒருவாட்டி கேட்டுப் பார்க்கலாமா” என சதீஷ் யுவனிடம் கேட்கிறார்.
அதற்கு பதில் கூறும் யுவன், “அதெல்லாம் வெங்கட் பிரபு தான் கேட்கணும்” என்பதாக கூறி சதீஷ்க்கு செம்ம பல்பு கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது என யுவனை டேக் செய்து அப்டேட் கேட்டு வருகின்றனர். தளபதி 68ல் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, யோகி பாபு, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











