என்னை யாரும் புகழ வேண்டாம்.. அது மத நம்பிக்கையை பாதிக்கும்.. தங்கல் நாயகி திட்ட வட்டம்!
மும்பை: எல்லா புகழும் இறைவனுக்கே என நினைக்கும் இஸ்லாமிய மார்கத்தை முழுமையாக கடை பிடிக்கத் தொடங்கியுள்ள தங்கல் நடிகை சைரா வாசிம் தன்னை யாரும் புகழ வேண்டாம் என ட்வீட் போட்டுள்ளார்.
அமீர் கான் நடிப்பில் உருவாகி, ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த தங்கல் படத்தில் இளம் வயது கீதா போகட்டாக நடித்திருப்பார் சைரா வாசிம்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமீர் கான் தயாரிப்பில் வெளியான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தில், லீடு ரோலில் நடித்து, அந்த படத்தையும் அதிரி புதிரி ஹிட்டாக்கினார்.
கடைசியாக பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடித்திருந்த சைரா வாசிம், கடந்த ஆண்டு திடீரென சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போவதாக அதிரடியாக அறிவித்து, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், தன்னை யாரும் புகழ வேண்டாம் என்றும் அது தான் கடைபிடிக்கும் இறை நம்பிக்கையை பாதிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை வரவேற்றும், எப்படி இருந்த பெண் இப்படி மாறிவிட்டரே என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











