நீச்சல் குளத்தில் ‘நச்’.. காதலனுக்கு லிப் லாக் அடித்த ரியாலிட்டி ஷோ பிரபலம்.. வைரலாகும் போட்டோ!

ஸ்பெயின்: நீச்சல் குளத்தில் காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் ரியாலிட்டி ஷோ பிரபலத்தின் ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

'லவ் ஐலாண்ட்' எனும் பிரபல ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சாரா மெக்டெர்மாட்.

தனது இரண்டாவது காதலர் சாம் தாம்ஸனுக்கு சாரா கொடுத்துள்ள முத்த புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஸ்டார்

ரியாலிட்டி ஸ்டார்

இங்கிலாந்தில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி ஷோவான ‘லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இந்த ஸ்பெயின் மாடல். 2018ல் ஒளிபரப்பான இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

பீச் பேபி

பீச் பேபி

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் பிகினியுடன் பல எபிசோடுகளில் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்து இழுத்த சாரா, ஒரு அளவில்லாத பீச் பிரியை என்றே சொல்லலாம். பொதுவாகவே மாடல் அழகிகளுக்கு பீச் என்றாலே பிடிக்கும். கடற்கரையில், எடுக்கப்படும் போட்டோஸ் எல்லாம் அவர்களின் லைஃப் டைம் ஃபேவரைட் போட்டோஸாக அமைந்தும் வருகின்றன.

இரண்டாவது காதலர்

இரண்டாவது காதலர்

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில், ஆடம் கொலார்டை காதலித்து வந்த ரியாலிட்டி ஸ்டார் சாரா மெக்டெர்மாட், தற்போது அவரை கழட்டி விட்டு, தனது இரண்டாவது காதலர் சாம் தாம்ஸனுடன் டேட்டிங் செய்து வருகிறார். மீன்களுடன், மீன்களாக அண்டர் வாட்டரில் நீந்த ரெடியாக இருந்த போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

🐡🐠🐟🐬🐢

A post shared by Zara McDermott (@zara_mcdermott) on

கிளாமர் மட்டுமில்ல

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளாமர் காட்டி டேட்டிங் செய்ய மட்டும் தான் இவருக்கு தெரியும் என்று லேசாக எடை போட்டு விட வேண்டாம். அமெரிக்காவின் பிரபல ஷோவான எக்ஸ் ஃபேக்டரில் கலந்து கொண்டு, தனது பாடும் திறமையையும் நிரூபித்துள்ளார். இன்ஸ்டாவிலும் அவ்வப்போது பாடல் பாடி வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பிளேஸர் மட்டும் அணிந்து

பிளேஸர் மட்டும் அணிந்து

சமீபத்தில், சிகப்பு நிற பிளேஸர் மட்டும் அணிந்து கொண்டு, உள்ளாடை ஏதும் அணியாமல், உச்சக்கட்ட கவர்ச்சியில் அவர் கொடுத்த போஸ் சர்வதேச அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. என்னம்மா ஹாட்டா இருக்காரே என கமெண்ட் செக்‌ஷனில் லிட்டர் கணக்கில் அவரது ரசிகர்கள் ஜொள்ளு வடித்து இருந்தனர்.

பீட்ஸா பிரியை

பீட்ஸா பிரியை

சாராவுக்கு பீட்ஸா என்றால் ரொம்ப உயிராம். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லார்ஜ் பீட்ஸாக்களை உண்ணும் புகைப்படங்களை பதிவிட்டு, நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறார். அதுவும் சமீபத்தில் தனது காதலர் சாம் தாம்ஸன் மடியில் அமர்ந்துக் கொண்டு படு ரொமாண்டிக்காக இவர் பீட்ஸா சாப்பிட்ட போட்டோ வேற லெவலில் லைக்குகளை குவித்தது.

நீச்சல் குளத்தில் ‘நச்’

நீச்சல் குளத்தில் ‘நச்’

ஸ்பெயின் நாட்டில் எல்லாம் லாக்டவுன் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நேரத்திலும் தனது காதலருடன் கடற்கரை நகரமான மார்பெல்லாவில் தனது சுற்றுலாவை என்ஜாய் செய்து வருகிறார் இந்த ரியாலிட்டி ஸ்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நீச்சல் குளத்தில், காதலன் சாமின் இடுப்பில் அமர்ந்து கொண்டு, அவரது உதட்டில் நச்சுன்னு இச் கொடுத்த புகைப்படம் லட்சக் கணக்கான லைக்குகளையும் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X