வயிறை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்: நெத்தியடி கொடுத்த நடிகை
மும்பை: அதென்ன வயிற்றில் கோடு, கோடாக இருக்கிறது என்று கேட்டு கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதில் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை ஜரீன் கான்.
சல்மான் கானின் வீர் படம் மூலம் நடிகையானவர் ஜரீன் கான். அவர் பார்க்க நடிகை கத்ரீனா கைஃப் போன்று இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். ஜரீன் நடிக்க வரும் முன்பு குண்டாக இருந்தார்.

இந்நிலையில் அவர் தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள்,
அது என்ன உங்களின் வயிற்றில் கோடு, கோடாக உள்ளது. வயிறை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது. இப்படி ஒரு வயிறை வைத்துக் கொண்டு அது தெரியுமம்படி புகைப்படம் வெளியிடலாமா?
பாலிவுட் நடிகையாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான வயிறா என்று கேட்டு கண்டபடி விமர்சித்தனர். சிலரோ ஜரீன் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வயிற்றுக்கு மேக்கப் போட்டு அழகாக காட்டாமல் உள்ளதை உள்ளபடி பெருமையாக காட்டியுள்ளீர்கள் என்று பாராட்டியுள்ளனர்.
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த ஜரீன் கான் கூறியதாவது,
என் வயிறு ஏன் அப்படி இருக்கிறது என்று வியப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 50 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த ஒருவரின் வயிறு இப்படித் தான் இருக்கும். போட்டோஷாப் செய்யவில்லை என்றால் வயியறு இப்படி தான் தெரியும்.
எப்பொழுதும் உண்மையாக இருக்க விரும்புபவள் நான். அதனால் என் வயிறை நினைத்து நான் வெட்கப்படவில்லை. எனவே, என்னை கிண்டல் செய்வது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
ஜரீன் கானின் புகைப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவோ, ஜரீன் நீங்கள் இப்படித் தான் அழகாக உள்ளீர்கள் என்று பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











