எம்.ஜி.ஆர், ஜெய்சங்கருடன் நடித்த.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல நடிகைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில், இந்தியா இருக்கிறது.

பாதிப்பு எண்ணிக்கை
ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உள்ளது. 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய்
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 88 ஆயிரத்து 935 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுக்குப் பிரபலங்களும் பாதித்து வருகின்றனர். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், நடிகர் விஷால், எஸ்.எஸ்.ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா உள்பட பல பிரபலங்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

ஜரினா வஹாப்
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ஜரினா வஹாப்புக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர், தமிழில் எம்.ஜி.ஆரின் நவரத்தினம் படத்தில் நடித்துள்ளார். ஜெய்சங்கருடன் கைவரிசை என்ற படத்திலும் நடித்துள்ளார். பல மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தயாரிப்பாளரும் நடிகருமான அதித்யா பஞ்சோலியின் மனைவி.

சூரஜ் பஞ்சோலி
இவர்கள் மகன் சூரஜ் பஞ்சோலியும் மகள் சனாவும் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜரினா வஹாப்புக்கு திடீரென மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை
இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நிலை குணமானதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











