twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிங்கர்டிப் வெப் சீரிஸ்... அழுமூஞ்சி சீரியல்களுக்கு இனி பை பை சொல்லுங்க

    |

    சென்னை: ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ஃபிங்கர்டிப் என்ற பெயரில் 5 வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது. மெகா சீரியல் தொல்லையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்த மீண்டும் வந்துவிட்டன குறுந்தொடர்கள். ஆனால் இவை எல்லாம் டிவி சேனல்களில் வராது. அதற்கு பதிலாக இணையதளத்தில் வெப் சீரிஸ்களாக கண்டு மகிழலாம்.

    தங்களுடைய டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காகவே டிவி சீரியல் பார்ப்பவர்களின் பிபி, சுகரை அதிகரிக்கச் செய்யும் டிவி சீரியல்களுக்கு மாற்றாக, ஒரு சில வாரங்களிலேயே முடியும் வெப் சீரிஸ்கள் பிரபலமடைந்து வருன்றன.

    Zee 5 produces Fingertip web series

    தனியார் சேட்டிலைட் சேனல்கள் நுழைவதற்கு முந்தைய காலங்களில் மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே நமக்கு இருந்த ஒரே பொழுதுபோக்காக இருந்த காலகட்டம். அப்போது, ஒளியும் ஒலியும், இதைவிட்டால் தூர்தர்ஷனில் நாடகம் ஒளிபரப்பாகும்.

    ஞாயிற்றக்கிழமையில் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். இந்த நடைமுறையில் பின்பு சிறிய மாற்றம் வந்தது. ஞாயிற்றுகிழமை காலை வேளையில் நீலா மாலா என்ற 12 வாரங்கள் மட்டும் ஒளிபரப்பாகும் குறுந்தொடர் ஒளிபரப்பானது

    Zee 5 produces Fingertip web series

    பின்பு கவிதாலயா தயாரிப்பில் ரயில் சிநேகம் (தயவு செய்து இன்றைய சீரியல் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இந்த மாதிரியான சீரியல்களை பார்க்கவும்), இவளா என் மனைவி, ரேவதி, சுரேஷ் மேனன் நடித்த இரவில் ஒரு பகல் போன்ற தொடர்கள் பார்வையாளர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டன.

    இதில் இன்னொரு முக்கியமான விசயம், இன்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலின், சமூக சீர்திருத்த போராளியாக அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த குறிஞ்சி மலர் சீரியல். அன்றைய காலத்தில் தி.மு.கவினர் தங்களின் குழந்தைகளுக்கு அரவிந்தன் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்த பெயர்.

    நாளடைவில், தனியார் சேட்டிலைட் சேனல்கள் நுழைந்த பின்பு மேற்கண்ட குறந்தொடர்கள் எல்லாம் ஓரம்கட்டப்பட்டு, அதற்கு பதிலாக பார்வையாளர்களை எப்போதும் திக் திக் மனநிலையிலேயே வைத்திருக்கும் மெகா சீரியல்கள் வர ஆரம்பித்தன. இவை வந்த புதுசில் பார்வையாளர்களை குஷிப்படுத்தினாலும், நாளடைவில் இதுவே வெறுப்படைய வைத்தன.

    Zee 5 produces Fingertip web series

    இதனால் இந்த மெகா சீரியல் தொல்லையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்த மீண்டும் வந்துவிட்டன குறுந்தொடர்கள். ஆனால் இவை எல்லாம் டிவி சேனல்களில் வராது. அதற்கு பதிலாக இணையதளத்தில் வெப் சீரிஸ்களாக கண்டு மகிழலாம்.

    வெப் சீரியலுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. தற்சமயம் வெப் சீரியல்களை சில பேர் எடுத்து ஒளிபரப்பிக்கொண்டு உள்ளனர். இதில் மிகப்பெரிய இயக்குநர்களும், நடிகர்களும் உள்ளனர். இவை பெரும்பாலும் 5 முதல் 12 எபிசோட் வரை மட்டுமே இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் ஒரு கதையை கொண்டிருக்கும். இதில் தற்போது புதிதாக ஜீ(Zee) தொலைக்காட்சியும் இதில் களம் இறங்கிவிட்டது.

    Zee 5 produces Fingertip web series

    ஜீ தொலைக்காட்சியின் சார்பாக ஜீ 5 தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் விஷ்ணுவர்த்தனம் இணைந்து, ஃபிங்கர்டிப் (Fingertip) என்ற பெயரில் வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிடப்போகிறது. முதலில் 5 எபிசோட்களை தயாரித்து வெளியிடுகிறது. இந்த வெப் சீரிஸ்களை ஜீ5 என்ற மொபைல் ஆப்ஸ் மூலம் பார்க்கலாம். வரும் 21ஆம் தேதியன்று வெப் சீரிஸ்களை வெளியிடுகின்றன.

    இந்த வெப் சீரிஸ்களின் இயக்குநர் ஷிவாகர். முதல் எபிசோடில் நடிகை அக்சராஹாசன் நடிக்கிறார். இவருடன் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடிக்கிறார். இவருடன் நாயகியாக நடிப்பது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி. மற்றொரு சீரிஸில் சிவாஜியின் பேரனுடன் நடிகை சுனைனா நடிக்கிறார்.

    வெப் சீரிஸின் கதை என்பது தற்போது நாம் பயன்படுத்துகின்ற மொபைல் ஃபோன் ஆப்களைப் பற்றியே இருக்கும். இந்த ஆப்களை பயன்படுத்துவதால் நாம் எந்த அளவுக்கு அவைகளுக்கு அடிமையாக இருக்கிறோம். இதிலிருந்து எப்படி மீள்வது என்பது பற்றியே இருக்கும். ஃபிங்கர்டிப் வெப் சீரிஸின் ஆடை வடிவமைப்பாளர் விஷ்ணுவர்த்தனின் மனைவி அனு வர்தன்.

    ஜீ5 நிறுவனம் இந்த ஆண்டுக்குள் இதே போல் மேலும் 72 வெப் சீரிஸ்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆட்டோ சங்கர் என்னும் வெப் சீரிஸ் தயாரித்து வெளியிட்டது. அது வெற்றி பெற்றதை அடுத்து தற்போது மேலும் அதிக அளவில் வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிட தீர்மானித்துள்ளது.

    இது குறித்து பேசிய ஜீ5 நிறுவனத்தின் தலைவர் அபர்ணா, வெப் சீரிஸ்களை அதிக மொழிகளில் டப் செய்து வெளியிடப்போகிறோம் என்று தெரிவித்தார்.

    English summary
    Following the success of the Auto Shanker Web Series, G5 announced that it is currently planning to produce and launch five web series under the name Fingertip.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X