twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    325 கோடியாம்ல.. எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கும் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஒடிடி விற்பனை?

    |

    சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமத்தை சுமார் 325 கோடிக்கு ஜி சினிமா குரூப் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி மற்றும் சில ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.

    இன்னிக்கு யாரு? மநீம ஸ்ரீபிரியாவின் டிவிட்டை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!இன்னிக்கு யாரு? மநீம ஸ்ரீபிரியாவின் டிவிட்டை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

    ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து 2 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்டத்தின் உச்சம்

    பிரம்மாண்டத்தின் உச்சம்

    இயக்குநர் ஷங்கரை மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக மாறிவிட்டார் ராஜமெளலி. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை பார்த்து பல ஹாலிவுட் நடிகர்களே பிரம்மித்து போனார்கள். திரையுலகையே 2000 கோடி வசூல் இந்தியாவில் சாத்தியம் என பாலிவுட்டுக்கே பாகுபலி மூலம் பாடம் நடத்தினார் ராஜமெளலி.

    அடுத்த படைப்பு

    அடுத்த படைப்பு

    பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்டத்தை கொடுக்கும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தை பான் இந்தியா படமாக இயக்கி வருகிறார் ராஜமெளலி. டோலிவுட் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீடு ரோலில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட்டையும் இந்த படத்தில் இணைத்துள்ளார். மேலும், கோலிவுட்டை கவர சமுத்திரகனிக்கு சிறப்பான ரோல் கொடுத்துள்ளார்.

    325 கோடி ரூபாய்க்கு

    325 கோடி ரூபாய்க்கு

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 325 கோடிக்கு ஜி சினிமா குழுமம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தியேட்டரில் வெளியான பிறகு ஜீ 5 ஒடிடி தளத்தில் ஆர்.ஆர்.ஆர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தி ரைட்ஸ்

    இந்தி ரைட்ஸ்

    ஏற்கனவே இந்த படத்தின் இந்தி உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா 140 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மகாபாரதம் அனிமேஷன் படம், ரங் ரசியா, ஷிவாய், சன்னி லியோனின் மஸ்திஜாதே உள்ளிட்ட படங்களை தயாரித்து பாலிவுட்டில் பிரபலமானவர் இவர்.

    Recommended Video

    முதல் முறையாக வரலாற்று படம் எடுக்கும் சங்கர் | Ram Charan Pan India Movie
    லைகா கையில்

    லைகா கையில்

    மேலும், தமிழ் உரிமையை லைகா நிறுவனம் 42 கோடிக்கு கைப்பற்றி உள்ளது. அதுமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் தியேட்டரிக்கல் உரிமம் சுமார் 280 கோடி வரை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அறிவித்தபடி இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி படம் வெளியாகும் என தெரிகிறது.

    English summary
    Zee group bought post release digital and satellite rights of SS Rajamouli’s RRR movie for whopping 325 crores.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X