twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்னா சும்மாவா.. தளபதி 66 பட பூஜையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சூடு பிடித்த டிஜிட்டல் பிசினஸ்!

    |

    சென்னை: தளபதி 66 படத்தை இயக்கப் போவது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த நிலையில், அதன் டிஜிட்டல் பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

    என்ன சொல்றீங்க.. உச்ச நடிகருக்கே இப்படியொரு நிலைமையா? இயக்குநருக்கு வலைவீசும் தயாரிப்பு தரப்பு!என்ன சொல்றீங்க.. உச்ச நடிகருக்கே இப்படியொரு நிலைமையா? இயக்குநருக்கு வலைவீசும் தயாரிப்பு தரப்பு!

    விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    தளபதி 66 இயக்குநர்

    தளபதி 66 இயக்குநர்

    தமிழில் கார்த்தியின் தோழா, தெலுங்கில் மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கத்தில் தான் தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் நடிக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அந்த படம் குறித்த அடுத்த கட்ட பிசினஸ் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    பை லிங்குவல்

    பை லிங்குவல்

    இதுவரை தமிழ் படங்களிலேயே நடித்து வந்த நடிகர் விஜய் தற்போது முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் கரம் கோர்த்துள்ளார். பைலிங்குவல் படமாக இந்த படம் உருவாக உள்ள நிலையில், படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இரு மாநில ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளன.

    அடுத்த லெவல்

    அடுத்த லெவல்

    டோலிவுட் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் மற்றும் இந்தி மொழிகளை குறி வைத்து பான் இந்திய படங்களாக உருவாகி வருகின்றன. பிரபாஸ், ராம்சரண், அல்லு அர்ஜுன் என பல முன்னணி நடிகர்கள் பான் இந்திய நடிகர்களாக பிரகாசித்து வரும் நிலையில், தளபதி விஜய்யும் அந்த ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ளார்.

    தியேட்டரில் தான்

    தியேட்டரில் தான்

    மாஸ்டர் படத்தை போலவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் மற்றும் உருவாகப் போகும் தளபதி 66 உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. ஆனால், தியேட்டரில் படம் ரிலீசானலும் 4 வார காலத்திற்கு பிறகு எந்த டிஜிட்டல் நெட்வொர்க்கில் அந்த படம் வெளியாகப் போகிறது என்கிற டிஜிட்டல் பிசினஸ் சினிமா உலகில் தற்போது சூடுபிடித்துள்ளது.

    டிஜிட்டல் உரிமம்

    டிஜிட்டல் உரிமம்

    இந்நிலையில், மிகப்பெரிய தொகைக்கு நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்ற பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டிகள் நிலவி வருகின்றன. இன்னமும் தளபதி 66 படத்திற்கு பூஜை கூட போடவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

    ஜீ நெட்வொர்க்

    ஜீ நெட்வொர்க்

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பல படங்களை போட்டி போட்டு சன் நெட்வொர்க் கைப்பற்றி வரும் நிலையில், விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தளபதி 66 படத்தின் உரிமையை ஜீ நெட்வொர்க் கைப்பற்றப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொடுத்து தளபதி 66 படத்தை வாங்க ஜி நெட்வொர்க் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Actor Vijay’s Thalapathy66 Post theatrical digital & Satellite rights is in final stage of negotiation with Zee Network for massive price even before the shooting starts shocks Film Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X