Saregamapa: சரிகமப மேடையை சிலிர்க்க வைத்த கவினா -ரேஷ்னா.. அடுத்து நடந்த மேஜிக்.. முழு விவரம் இதோ!
சென்னை: ஜீ தமிழ் சேனலில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி.
28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது எலிமினேஷன் சுற்றுக்களால் போட்டியாளர்கள் குறைந்துள்ளனர்.

சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 ஷோவில் அனைவரையும் கவர்ந்த கவினா -ரேஷ்னா: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியில் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் போட்டியாளர்களையும் அவர்களது திறமைகளையும் சரியான வகையில் ஊக்குவித்து நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சுற்றுக்களால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வாரம் பக்தி பாடல்கள் ரவுண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சிறப்பாக பங்கேற்று நிகழ்ச்சியை பக்திமயமாக்கினர். சிறப்பான பாடல்களால் அரங்கமே நிறைந்தது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற கவினா மற்றும் ரேஷ்னா ஆகியோர் ஒன்றாக இணைந்து பாடலை பாடி அசத்தினர்.
இவர்கள் பாடிய ஒண்ணாம் படியெடுத்து பாடலுக்கு நடுவர்கள் உள்பட ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் கோல்டன் பர்பார்மென்ஸ் பட்டமும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் முளைப்பாரி இடம்பெறும் என்பதால் இவர்கள் இருவரும் இணைந்து 9 நாட்கள் விரதமிருந்து வீட்டில் முளைப்பாரி வளர்த்து அதை சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மேடைக்கு கொண்டு வந்திருந்தனர்.

தொடர்ந்து போட்டியாளர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் முளைப்பாரியை சுற்றிவந்து நடனமாடியது பார்த்தவர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. பொதுவாக முளைப்பாரி வழிப்பாட்டின்போது கண்டிப்பாக மழை பெய்யும் என்பது ஐதீகம். அதே போல இவர்களது பெர்பாமன்ஸ் முடிந்த இரண்டு மணி நேரத்திற்குள் ஷூட்டிங் நடைபெற்ற EVP பிலிம்ஸ் சிட்டியில் மழையும் பெய்து அனைவரையும் வியக்க வைத்தது.
மேலும் இந்த பர்பார்மென்சின்போது கவினாவின் தங்கை அம்மன் வேடத்தில் வந்து குலவை போட்ட நிகழ்வும் நடைபெற்றது. இந்த தருணங்கள் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சுற்றுக்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி. இரண்டு சீசன்களை சிறப்பானவகையில் நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சுற்றையும் சிறப்பாக நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











