twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ தமிழின் புதிய முயற்சி.. இசைக்கொண்டாட்டம்.. 25 மணிநேர நேரலை !

    |

    சென்னை : இந்தியா முழுவதும் பிரபல இசை ரியாலிடி நிகழ்ச்சியான ச ரி க ம பா மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த இசை இன்பத்தைத் தனது நேயர்கள் அனைவருக்கும் குதூகலத்துடனும் நம்பிக்கையுடனும் பரப்ப ஜீ தமிழ் திட்டமிட்டுள்ளது.

    கடந்த பல சீசன்களாக நடைபெற்ற திறன் தேடல் வேட்டையில், ச ரி க ம ப சிறப்பான நிகழ்ச்சி தயாரிப்பைக் காட்சிப்படுத்தித் தமிழ்ச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் புதிய பெஞ்ச்மார்க் தரத்தை உருவாக்கி உள்ளது.

    திறமையை முக்கிய அடிப்படையாகக் கொண்ட புதிய தளத்தை வழங்குவதன் மூலம் பல இளம் பாடகர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளது.

    பாத்ரூமில் செல்ஃபி.. டாப் ஆங்கிள் போட்டோ.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் பியூமி ஹன்சமாலி!பாத்ரூமில் செல்ஃபி.. டாப் ஆங்கிள் போட்டோ.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் பியூமி ஹன்சமாலி!

     பிரம்மாண்ட நிகழ்ச்சி

    பிரம்மாண்ட நிகழ்ச்சி

    ஜீ தொலைக்காட்சி ச ரி க ம பா 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஜீ வலைப்பணியுடன் இணைந்து ஜீ சேனல்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் 25 மணி நேர லைவ் டிஜிட்டல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. 10 பிராந்தியங்களில் ச ரி க ம பா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 350 கலைஞர்கள் தங்கள் பாட்டுத் திறமையை நேரலையாக வழங்க உள்ளனர் .

     நிதி திரட்டுதல்

    நிதி திரட்டுதல்

    கோவிட்-19 தொற்று நோயால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் இலாப நோக்கு இல்லாத ‘கிவ் இந்தியா‘ அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இவர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அனைத்து ஜீ வலைப்பணி சேனல்களையும் கையாளும் முகநூலில் மே 24 மற்றும் 25 தேதிகளில் நேரலையாக நடைபெற உள்ளது. அதுமட்டும் அல்லாமல் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர் .

     முன்னணி இசைக்கலைஞர்கள்

    முன்னணி இசைக்கலைஞர்கள்

    நேயர்கள் பார்த்தும், கேட்டும் மகிழ இந்த இசை நிகழ்ச்சியில் விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், சுஜாதா, ஹரிசரண், ராஹுல் நம்பியார், சக்திஸ்ரீ கோபாலன், ரஞ்சித், சரண்யா ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ச ரி க ம பா கடந்த சீசன்களின் முன்னணிப் போட்டியாளர்களான வர்ஷா, ரமணி அம்மாள், அஸ்லம், கமலேஷ், ஜஸ்கரன் சிங்க், விஷ்வ பிரசாத், ஸ்ரீநிதி, சுகன்யா, ஷரிமிலி, ஐஸ்வர்யா, ஆர்யா நந்தா, அருள் பிரகாசம், ஜனகன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

     நம்பிக்கை

    நம்பிக்கை

    இந்த நேரலை நிகழ்ச்சி குறித்து ஜீ எண்டெர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தென் பிராந்திய க்ளாஸ்டர் தலைவர் சிஜு பிரபாகரன் கூறுகையில் ‘உலகளாவிய சூழல் நாட்டை ஒருங்கிணைத்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில். ஜீ தமிழ் தொலைக்காட்சியைச் சேர்ந்த நாங்கள் ஆக்கப்பூர்வ மற்றும் நம்பிக்கையான விஷயங்களைப் பரப்ப உறுதி பூண்டுள்ளோம்.

     மகிழ்ச்சியில் இசைக்கலைஞர்கள்

    மகிழ்ச்சியில் இசைக்கலைஞர்கள்

    25 ஆண்டு காலப் பயணம் என்பது எங்கள் வலைப்பணிக்கு மிக முக்கிய மைல்கல் ஆகும். முகநூல் மற்றும் கிவ் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்த இந்த வித்தியாசமான நிகழ்ச்சி சமூகத்துக்குச் சேவை செய்யவும் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கவும் வாய்ப்பளித்துள்ளது. நாட்டின் தலை சிறந்த இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மூலம் எங்கள் நேயர்களுக்கு மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் வழங்க உள்ளோம்'என்றார்.

     புதிய முயற்சி

    புதிய முயற்சி

    நாடு முழுதும் இருக்கும் இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக பல துறையை சார்ந்தவர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாவால் பொருளாதாரம் பெரும் அளவில் வீழ்ச்சியை அடைந்துள்ளது. அதில் இருந்து மீட்க இந்த புதிய முயற்சியை ஜீ தொலைக்காட்சி எடுத்துள்ளது. இந்த நேரலை நிகழ்ச்சி ரசிகர்களால் பெரும் அளவில் ரசிக்கப்படும் என்று பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Zee tamil has organized a 25-hour live digital concert
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X