சினேகாவால் தீபாவிற்கு வந்த சிக்கல்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றும் போது மூன்று மருமகள்களும் இருக்க வேண்டும் என்கிறார்.
இதையடுத்து இன்று, நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஆபிசிலில் தீபா: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாட்சி, தீபாவிடம் விஷயத்தை சொல்ல, உடனே தீபா, நான் இன்று ஆபிசுக்கு போகல, நான் லீவ் சொல்லிடுறேன் என்கிறாள். மீனாட்சி கார்த்திக்கு போன் பண்ணி சொல்லு என்று சொல்ல, நான் அவருக்கு பலமுறை போன் பண்ணேன். ஆனால், அவர் நம்பர் ரீச் ஆகல, நான் ஆபிசில் சொல்லிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறாள்.
சினேகாவின் பிளான்: இதையடுத்து, தீபா, சினேகாவிடம் போன் செய்து லீவ் கேட்கிறான். ஆனால், சினேகாவோ, நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, கார்த்தியோட பி.ஏ வாக நீங்க தான் அந்த வேலையை செய்து ஆகவேண்டும். ரெண்டு மணி நேரம் தான் அந்த வேலை. அதன் பிறகு நீங்க வீட்டுக்கு போய்டுங்க என்று சொல்கிறாள். இதனால் தீபாவும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவிக்கிறாள்.

பெரிய பிரச்சனை: இதையடுத்து, தீபா மீனாட்சியிடம் போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவள் சரியான டைம்க்கு இங்க வந்துடு, இல்லனா அபிராமி அத்தை பெரிய பிரச்சனை பண்ணிடுவாங்க என்று சொல்ல, தீபா நிச்சயம் வந்து விடுவதாக சொல்லி வேலைக்கு கிளம்பி செல்கிறாள். வேறொரு ஆபிசில் பைலை கொடுக்க சொல்லி சினேகா வெளியே அனுப்ப தீபாவும் கிளம்பி வருகிறாள்.
சினேகாவின் சதி: பிறகு சினேகா இந்த ஆபிஸ்க்கு போன் செய்து தீபா இன்னைக்கு முழுக்க அங்க தான் இருக்கணும், அவள் எங்கேயும் போகக்கூடாது, அவ வெளியில் போகமா பாத்துக்கொங்க என்று சதி திட்டம் தீட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











