For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் குடும்பங்கள் கொண்டாடும் … ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 .. புது பொலிவுடன் மீண்டும் ஆரம்பம்

  |

  சென்னை: ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 மூன்றாவது சீசனில் புத்தம் புதிய அவதாரத்தில் திரும்பிவருகிறது;

  Bigg Boss Vs Zee Kudumbha Virudhugal Munnottam • 26 Stars, 1 House, 3 Days

  இது திறமையையும், பொழுதுபோக்கையும் கொண்டாடுவதற்கான ஓர் புதியதோர் அடித்தளம் என்றே சொல்லலாம் . 2020 அக்டோபர் 12: 2008ஆம் ஆண்டு ஒளிபரப்பு தொடங்கியது முதல் முன்னணி தமிழ்ப் பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ், புனைகதை (Fiction) மற்றும் புனைகதை அல்லாத (Non-Fiction) பிரிவுகளில் புதுமையான வடிவங்கள், எண்ணங்கள், கருத்துக்கோள்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பெருமையைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

  உலகெங்குமுள்ள தமிழர்களின் மகத்தான வரவேற்பையும், ரசிகர்களையும், ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பெற்று வருவதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திறமையானவர்களைப் பாராட்டவும், அங்கீகரிக்கவும், ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 மூன்றாவது சீசனைச் சேனல் அறிவித்துள்ளது.

  பயில்வான் லேசுப்பட்ட ஆளு இல்லப்பா.. ஆத்தாவையே தண்ணி பார்ட்டின்னு சொல்லி.. டகால்டி விட்டவரு!

  ரசிகர்களுக்கு

  ரசிகர்களுக்கு

  நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிமுகம் தென் இந்திய தொலைக்காட்சி ஊடக வரலாற்றிலேயே முதன் முறையாக (Virtual Press Conference) நடைபெற்றது. சின்னத்திரை நிகழ்ச்சியின் கண்கவர் காட்சிகளையும், குதூகலத்தையும், முன்னெப்போதும் கண்டிராத இல்லாத வகையில் ரசிகர்களுக்கு வழங்கியது.

  சூப்பர் ஸ்டார்ஸ்

  சூப்பர் ஸ்டார்ஸ்

  2018 இல் தொடங்கி ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் சேனலுக்குள் இருக்கும் மகத்தான திறமையை அங்கீகரித்துப் பாராட்டும் நிகழ்ச்சியாகும். பிரபல தொடர்களான செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா, நீதானே எந்தன் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை, பூவே பூச்சூடவா, என்றென்றும் புன்னகை, ராஜாமகள், ரெட்டை ரோஜா உள்ளிட்ட புனைகதைகள், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீன்ஸ், சூப்பர் மாம், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட புனைகதை அல்லாத நிகழ்ச்சிகளில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பயணத்தைக் கொண்டாடுகிறது.

  நாமினேஷன்

  நாமினேஷன்

  நடப்பு ஆண்டில் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 மூன்றாவது சீசனின் புதுமை, அதன் ‘சிறந்த விருதுகள்' (Best Category) பிரிவுக்கான வித்தியாசமான முன்னோட்ட நிகழ்ச்சியாகும். மற்றும் ‘பிடித்தமான விருதுகள்' (Favorite Award) பிரிவுக்கான நாமினேஷன் முழுவதும் டிஜிடல் மயமாக்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் குடும்பம் மூன்று நாள் நிகழ்ச்சிகள் பெரிய பங்களா ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பிடித்தமான விருதுகள்

  பிடித்தமான விருதுகள்

  குடும்ப உறுப்பினர்கள், குதூகலிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், சுவாரஸ்யமான விளையாட்டுகளை ஆடிக் கொண்டும், இறுதிச் சுற்று நாமினேஷன் பட்டியலில் இடம் பிடிக்க ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்கள். இந்த மூன்றாவது சீசன் புதிய இயல்புக்கு இணக்கமாக நடைபெறும். பார்வையாளர்களின் வாக்குகள் ஜீ5 (www.ztkv.zee5.காம் ), ஜீ தமிழ் முகநூல் (பேஸ் புக்- Facebook) பக்கத்திலும், கைபேசிகளிலிருந்து மிஸ்ட் கால் தருதல் என டிஜிடல் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த இரு சீசன்களில் வாக்குகள் சேகரிப்பு ஆன் - கிரவுண்ட் மொபைல் கேண்டர்கள் மூலமும் நடைபெற்றது. பிடித்தமான ஹீரோ, பிடித்தமான ஹீரோயின், பிடித்தமான திரை ஜோடி, பிடித்தமான வில்லி, பிடித்தமான நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பிடித்தமான தொடர் ஆகியவை ‘பிடித்தமான விருதுகள்' பிரிவுகளில் அடங்கும்.

  கடுமையான கட்டுப்பாடுகளுடன்

  கடுமையான கட்டுப்பாடுகளுடன்

  அரசு விதிகளுக்கு இணக்கமாகவும், பார்வையாளர்கள் பாதுகாப்பிற்காகவும், நடப்பு ஆண்டு நிகழ்ச்சி கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரங்கிற்குள் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கீழ்க்காணும் தேதிகளில் பட்டியலிடப்பட்டுள்ளது: முன்னோட்டம் -அக்டோபர் 17 & 18 , சிகப்புக் கம்பளம் - அக்டோபர் 25, முக்கிய நிகழ்ச்சி பகுதி 1 - அக்டோபர் 25, முக்கிய நிகழ்ச்சி பகுதி 2 - நவம்பர் 1,முக்கிய நிகழ்ச்சி பகுதி 3 - நவம்பர் 8. இந்த தேதிகள் அனைத்தும் மக்கள் கொண்டாட்டமாக இருக்கும் என்று ஜீ தமிழ் நம்புகிறது.

  விருதுகளுக்கான

  விருதுகளுக்கான

  ஜீ எண்டெர்டெயின்மெண்ட் எண்டெர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் இவிபி மற்றும் தெற்கு வணிகப் பிரிவு களஸ்டர் ஹெட் சிஜூ பிரபாகரன், ஜீ தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் தமிழ்தாசன், ஜீ தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை பிரியா ராமன், இயக்குனர் & நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரு பழநியப்பன், நடிகர் ஸ்ரீகுமார், நடிகர் ஜெய் ஆகாஷ், ஆர்ஜே விஜய், நடிகை ரேஷ்மா, நடிகை ஆயிஷா மற்றும் நடிகர் தர்ஷணா ஆகியோர் முன்னிலையில் நடப்பு ஆண்டுக்கான பெருமைமிகு கோப்பையும், விருதுகளுக்கான பிரிவுகளும் அறிமுகமாயின.

  நீங்களும் வாக்களிக்கலாம்

  நீங்களும் வாக்களிக்கலாம்

  ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வாக்களிக்கும் கைபேசி இணைப்புகளும், டிஜிடல் தளங்களும் திறந்தே உள்ளன. உங்களுக்குப் பிடித்தமான ஜீ தமிழ் நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க இப்பொழுதே ஆரம்பிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

  English summary
  Zee Tamil Kudumbam Viruthugal 2020
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X