twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒளிபரப்பாக தொடங்கியது ஜீ குழுமத்தின் இரண்டாவது தமிழ் சேனல்.

    |

    இன்று ஜீ குழுமம் வெற்றிகரமாக தனது இரண்டாவது தமிழ் சேனலை துவங்கியுள்ளது. இது பிரத்தியேகமாக சினிமாவிற்காகவே துவக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு ஜீ திரை என பெயர் வைத்துள்ளனர்.

    தமிழில் ஒளிபரப்பாகும்பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுது போக்கு பிரிவில் - 'ஜீ திரை'என்ற புதிய சேனலின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளது.

    zee tamil launches its second channel in tamil

    தென்னிந்தியாவில், இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், ஜீ சினிமாலு சேனலை அடுத்து துவங்கப்பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது.

    zee tamil launches its second channel in tamil

    ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான,உலக நாயகன் டாக்டர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமைநிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) திரு. புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

    zee tamil launches its second channel in tamil

    ஜீ திரை சேனல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வம்,காதல்,உற்சாகம் பலவற்றை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ரத்தத்தில் கலந்தது சினிமா" என்ற பிராண்ட் வாக்கியத்தின் மூலம் இந்த சேனல் பறைசாற்றுகிறது. முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH(சேனல் எண். 775), டிஷ் டிவி (சேனல் எண். 547) மற்றும் D2H (சேனல் எண். 547) ஆகியவற்றில் இந்த சேனல் கிடைக்கும். கேபில் டிவி சந்தாதார்கள் ரூபாய் பன்னிரண்டு செலுத்தி ஜீ பிரைம் மூவி பேக் தமிழ் பெறலாம்.

    ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் திரு. சிஜூ பிரபாகரன் அவர்கள் கூறியதாவது, ஜீ குழுமத்தின் சேனல்களான - ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது.

    zee tamil launches its second channel in tamil
    இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.சினிமாவின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் புரிந்துகொண்டு,ஜீ திரை சேனலை துவங்கியுள்ளோம் என்று கூறினார்.

    ஜீ தமிழ், உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களின் மனதிலும், இதயத்திலும் ஒரு பிரியமான இடத்தினைப் பெற்றுள்ளது.தனித்துவமானஅனைத்து அம்சங்களும் நிறைந்த இதன் நிகழ்ச்சிகளுள் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, கோகுலத்தில் சீதை போன்ற கற்பனை தொடர்களும்; சூப்பர் மாம், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற நிஜ பங்கேற்பு நிகழ்ச்சிகளும் தமிழ் தொலைக்காட்சி பொழுது போக்கிலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

    zee tamil launches its second channel in tamil

    இந்த சேனலின் மிகப்பெரிய அம்சமாக திகழ்வது 52 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது; அதாவது வருடம் முழுவதும் வாரம் ஒரு புதிய திரைப்படம் - தமிழ் திரைப்பட சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும். உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையினை பூர்த்தி செய்யும் விதத்தில்,மெகாஹிட் திரைப்படங்கள் மற்றும் பலரின் பாராட்டைப் பெற்றப் படங்கள் என சரிவிகிதத்தில் சிறந்த திரைப்படங்களை ஜீ திரை வழங்கும்.
    ஒவ்வொரு வாரமும்வெள்ளி தோரும்ஒளிபரப்பாகவிருக்கும்'தெறி ஃபிரைடேஸ்", கடந்த கால சிறந்த படங்களை வழங்கும் 'ஃபில்ட்டர் காவியம்' மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளம்பரம் இல்லாத 'நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்' படங்கள் - என இதுபோன்ற பல தனித்துவமான அம்சங்களை இந்த சேனல் வழங்க உள்ளது.

    மெர்சல், 2.0, கனா, நேர்கொண்ட பார்வை, இரும்புத்திரை, தில்லுக்கு துட்டு 2, கோலமாவு கோகிலா போன்ற சிறந்த திரைப்படங்கள் உட்பட 400-க்கும் மேலான பலவகை திரைப்படங்களை இந்த சேனல் கொண்டுள்ளது.
    ஆக மொத்தத்தில் இந்த சேனல் பல திரை சேனல்களுக்கு ஒரு டப் பைட் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது போன்ற திரைப்படங்கள் மற்றும் பல ஷோக்கள் ஒளிபரப்பி மக்களிடையே இவர்களின் சேனல் நீங்கா இடம் பிடித்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

    English summary
    The launch announcement was made on the stage of Zee Cine Awards 2020 by none other than along with the emperor of Tamil Cinema- Dr Kamal Hassan along with Mr Punit Mishra, CEO- Zee Entertainment Enterprises Ltd. The channel is set to go on-air on Sunday today , 19th January. many movie buff people people will really love this channel its a gift to them
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X