பிக் பாஸ்க்கு போட்டியாக.. விஜய் டிவிக்கு செக் வைக்கும் ஜீ தமிழ்.. அந்த நிகழ்ச்சியை இறக்குறாங்களாம்!

சென்னை: ஒரு சேனலில் பிரபலமாகும் ரியாலிட்டி ஷோ போலவே பல சேனல்களில் வேறு வேறு பெயர்களில் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் இதுவரை வேறு எந்த பிரபல சேனலிலும் புதிய நிகழ்ச்சி அறிமுகமாகவில்லை.

இந்நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக புதிய ரியாலிட்டி ஷோவை ஜீ தமிழ் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவிக்கு போட்டி

விஜய் டிவிக்கு போட்டி

புதிய ரியாலிட்டி ஷோக்களை களமிறக்குவதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவி தான் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால், சமீப காலமாக விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ் தமிழ் என ஏகப்பட்ட சேனல்கள் பலவித ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி வருகின்றன.

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

ஆனாலும், டிஆர்பி கிங்காக இன்றும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழ்நாட்டில் டாப்பில் இருக்கிறது. அதனை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கும் ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ தொடங்கி வெற்றிகரமாக 4 சீசன்களை வேறு எந்த பெரிய போட்டியும் இன்றி கடந்துள்ளது.

ஆர்யா நிகழ்ச்சி

ஆர்யா நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழில் எங்க வீட்டு மாப்பிள்ளை என நடிகர் ஆர்யாவுக்கு மணப் பெண் தேடும் ரியாலிட்டி ஷோ ஒன்று பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் நடந்த சில சிக்கல்கள் காரணமாக நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி அடுத்தடுத்த சீசன்களை தொடரமுடியாமல் போனது.

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் லைஃப் சேனலில் சொப்பன சுந்தரி எனும் ஃபேஷன் நிகழ்ச்சி அரங்கேறியது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்க சாக்‌ஷி அகர்வால், பார்வதி நாயர் நடுவர்களாக இருக்க, ஏகப்பட்ட இளம் மாடல்களை கொண்டு கவர்ச்சி பொங்க சொப்பன சுந்தரி களைகட்டியது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியும் முழுமையாக அடுத்த கட்டத்திற்கு நகர முடியவில்லை.

சர்வைவர்

சர்வைவர்

இந்நிலையில், ஜீ தமிழில் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவை புதிதாக களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவிக்கு பல இடங்களில் கடும் போட்டியாக அமைந்து வரும் ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சியை கொண்டு வந்தால், அது நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செம டஃப் ஆக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

கடைசி வரை

கடைசி வரை

டிஸ்கவரி சேனல்களில் சர்வைவர் நிகழ்ச்சி பல காலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தனித் தீவில் எந்தவொரு வசதியுமின்றி விடப்படும் மனிதர்கள், தங்களை தாங்களே படம் பிடித்துக் கொண்டு, எப்படி கடைசி வரை தாக்குப் பிடிக்கின்றனர் என்பது தான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம். பிக் பாஸ் நிகழ்ச்சியும் சர்வைவர் போலத்தான். இந்நிலையில், ஜீ தமிழில் அறிமுகமாகவுள்ள அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது. எந்த எந்த பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளப் போகின்றனர் என ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

ரொம்ப சுதாரிக்கணும்

ரொம்ப சுதாரிக்கணும்

வரும் ஏப்ரல் மாதம் ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு, அவர்களுக்கு கொடுக்கப்படும் பிசிக்கல் டாஸ்க் என கடந்த முறை போல இல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டும் தான் பிக் பாஸ் 5வது சீசனால் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எண்ட்மோல் ஷைன்

எண்ட்மோல் ஷைன்

ஆனால், இந்த ரியாலிட்டி ஷோவை பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் எண்ட்மோல் ஷைன் இந்தியாவே தயாரிக்கவிருப்பதால், நேரடியான போட்டியாக அமையாது என்றும், பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும் முன்னதாகவே சர்வைவர் நிகழ்ச்சியை முடித்து விடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்னதான் நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X