ப்ரேக் அப் உடைந்து போனேன்.. மீடியா பையனே வேண்டாம்.. சீரியல் நடிகை மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சந்தியா ராகம் சீரியலில் மாயா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அன்டாரா. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், காதல் முறிவு குறித்தும் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

சன் தொலைக்காட்சி, விஜய் டிவிக்கு அடுத்த முன்னணி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

zee tamil sandhya ragam serial antara

சந்தியா ராகம்: அந்த வகையில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், சந்தியா ராகம் இந்த சீரியலும் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் ஒரு சீரியலாக இருக்கிறது இதில், சந்தியா ஜகர்லாமுடி, அன்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா, ராஜீவ் பரமேஸ்வர், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் மாயா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அன்டாரா சவர்னாகர். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகிழ்ச்சியாக உள்ளது: இந்நிலையில், Rednool Nangai youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அன்டாரா. அதில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். சந்தியா ராகம் சீரியலுக்காக நான் ஆடிஷன் வந்திருந்தேன், வந்ததும் அந்த கதாபாத்திரம் எனக்கு ஷூட்டாகிவிட்டது. அப்போது நான், தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்துக்கொண்டு இருந்தேன், இதனால் கால்ஷீட் பிரச்சனை வந்தது. இதையடுத்து தெலுங்கு சீரியலில் இருந்து விலகிவிட்டு இந்த சீரியலில், கமிட் ஆனேன். ஆடிஷன் வந்த ஒரு மாதத்திலேயே ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. சீரியல் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே என் கதாபாத்திரத்திற்கு பெரிய ரீச் கிடைத்தது, பலரும் என் கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

zee tamil sandhya ragam serial antara

பிரேக் அப்: நான் ஒருவரை காதலித்தேன் அவர், என் பிறந்த நாளில் அழகாக வாழ்த்துக்களை சொல்லி ஐ லவ் யூ சொன்னார். ஆனால், அந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. இப்போது அடுத்த காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணம் இல்லை. ஒரு வேளை வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள் என்றால், மீடியாவில் இருப்பவர்கள் வேண்டாம். ஏன் என்றால் நான் ரொம்ப பொசசிவ் என்பதால் அது எனக்கு செட் ஆகாது என்று அந்த பேட்டியில், அன்டாரா சவர்னாகர். பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: zee tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X