அசிங்கமாக நடந்து கொண்ட வெங்கடேஷ்.. பாடம் புகட்டிய முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல்!

சென்னை: வெங்கடேஷ், ரத்னா திட்டியதையே நினைத்துக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அறிவழகனும் ரத்னாவும் ஒன்றாக பைக்கில் வந்து இறங்குவதை பார்த்து ஆத்திரம் அடைகிறான். ரத்னா இப்படியே விட்டால், ரத்னா நமக்கு கிடைக்க மாட்டாள் என்ற முடிவு செய்த வெங்கடேஷ், சௌந்தரபாண்டியன் சொன்னது போல முதல் இரவை நடத்திடவேண்டும் என்று பிளான் போட்டுக்கொண்டு இருக்கிறான். அப்போது ரத்னா, ஏய் இசக்கி எனக்கு சுடுதண்ணி போட்டு வெச்சியா, நான் குளிக்க வேண்டும் என்று சொல்ல, போ அக்கா போட்டு வெச்சிருக்கேன் என்று சொல்கிறாள். ரத்னா உள்ளே போனதும் வெங்கடேஷ், அறிவழகனின் சட்டையை பிடித்து, என் பொண்டாட்டியை நீ ஏன்டா கூட்டிட்டு வந்த என்று கேட்க, அறிவழகன், அவனை திட்டிவிட்டு கிளம்புகிறான்.

மறுபக்கம், வீரா, இசக்கி கொடுத்த ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு பாக்யம் வீட்டுக்கு வர, பாக்கியம் அவளிடம் பேசிவிட்டு, இரு நான் டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். அப்போது, வீரா மற்றும் சிவபாலன் பேசி கொண்டிருக்க வீரா கண்ணில் தூசி விழ சிவபாலன் ஊதி தூசியை எடுக்க முயற்சி செய்கிறான். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து இருவரும் முத்தம் கொடுப்பதாக தப்பாக நினைத்து நெஞ்சை பிடித்து உட்காருகிறார். ஷண்முகம் குடும்பத்துல இருந்து இன்னொருத்தி என் வீட்டு மருமகளா வந்துடுவா போலயே என்று பதறுகிறார். வீராவும் சிவபாலனும் சௌந்தரபாண்டி நெஞ்சை பிடித்து உட்கார்ந்ததை பார்த்து பதறுகின்றனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

zee tamil anna

அசிங்கமாக நடந்து கொண்ட வெங்கடேஷ்: இதையடுத்து, இசக்கி, வெங்கடேஷிடம் மாமா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன், கடையை பார்த்துக்கோங்க நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இந்த நேரத்தை வெங்கடேஷ், ரத்னாவை அடைவதற்கு இதுதான் சரியான நேரம் என வீட்டுக்குள் வருகிறான். அப்போது ரத்னா தலைக்கு குளித்து தலையை துவட்டிய படி இருக்க வெங்கடேஷ் பின்பக்கமாக வந்து அவளை கட்டியணைத்து நெருங்க நினைக்க, ரத்னா சத்தம் போட்டு, கத்தி உனக்கு அறிவு இல்லையா, இப்படித்தான் நடந்துப்பியா என்று கேட்க, நான் பொண்டாட்டி கிட்டத்தானே இப்படி நடந்து கொள்கிறேன் என்று சொல்லி, இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது.

zee tamil anna

பாடம் புகட்டிய முத்துப்பாண்டி: இந்த நேரம் பார்த்து, முத்துப்பாண்டி உள்ளே வர, வெங்கடேஷை அடித்து துவைக்கிறான். பொண்டாட்டியா இருந்தாலும் விருப்பம் இல்லாமல் கையை வைக்க கூடாது, நோ மீன்ஸ் நோ தான் என்று பாடம் புகட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

zee tamil anna

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X