இசக்கியின் உயிருக்கு ஆபத்து.. கோவிலில் நடக்க போகும் விபரீதம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !
சென்னை: இசக்கி வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கியிடம் நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும் உனக்காக யாருமே செய்யாததை நான் செஞ்சிருக்கேன். இந்த வீட்ல உனக்காக நான், வாழ வந்து இருக்கேன். இந்த வீட்ல எனக்கு எந்தவிதமான அவமானமும் நடக்கக்கூடாது அப்படி நடந்தா, அடுத்த நிமிஷம் நீ என் கூட என் வீட்டுக்கு வந்துடனும் என்று சத்தியம் செய்து தரும்படி கேட்கிறான். உடனே இசக்கி உங்கள நான் எந்த இடத்திலும் எப்போதும் விட்டு தர மாட்டேன் மாமா. இந்த வீட்ல உங்களுக்கு எந்த விதமான அவமானமும் நடக்காது, அப்படி நடந்ததுனா அடுத்த நிமிஷம் நான் உங்களோட வந்துருவேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களுக்கு பிறகு இசக்கியும், முத்துப்பாண்டியும் மனம் விட்டு பேசுகின்றனர். அப்போது, முத்துப்பாண்டி, யார் என்ன சொன்னாலும் எனக்கு கோவம் வரும், அவ்வளவு திமிரு புடிச்சவன் நான். ஆனா, இப்போ உன்னால ரொம்ப மாறி இருக்கிறேன். இதுக்கு காரணம் நீதான், என் மனசு நிறைய ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த நேரத்துல உனக்கு என்ன வேணும்னு என்கிட்ட கேளு என்ற சொல்ல, அப்போது இசக்கி எனக்கு எதுவுமே வேண்டாம் மாமா, இந்த உலகத்திலேயே நீங்க தான் எனக்கு வேணும், உங்களோட வாழவேண்டும் என்பதுதான், என்னோட ஆசை அது இப்ப நடந்துருச்சு அதுவே எனக்கு போதும் மாமா என்று முத்துப்பாண்டியின் தோளில் சாய்ந்து கண்கலங்குகிறாள்.

இசக்கியை கொல்ல திட்டம்: மறுபக்கம் சௌந்தரபாண்டி அரிவாளால் ஒரு மரத்தை வெட்டுகிறான், அருவா நல்ல கூரா இருக்கு, ஒரே வெட்டுல இரண்டு துண்டா போச்சு, இப்படித்தான் அந்த இசக்கி தலையை வெட்டி, ரெண்டு துண்டாக வெட்ட வேண்டும் என்று, வாழை மரத்தை ஆத்திரத்தோடு வெட்ட அது ரெண்டு துண்டாகி விழுகிறது. இதைப்பர்த்து பாண்டியம்மா, சனியனும் மகிழ்ச்சி அடைகின்னர்.
முத்துப்பாண்டி இல்லை: இசக்கியும் முத்துப்பாண்டியும் ஒன்றாக சேர்ந்துவிட்டதால், அடுத்த நாள் காலையில் ஷண்முகம் குடும்பத்தினர் கெடா வெட்டி பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு வருகின்றனர். அப்போது, முத்துப்பாண்டி ஸ்டேஷனில் வேலை இருக்கு, கெடா வெட்டி பொங்கல் வைத்துவிட்டு போன் பண்ணுங்க, சாப்பிடுவதற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறான்.
மாறுவேடத்தில் சௌந்தரபாண்டி: இதைத் தெரிந்து கொண்ட சௌந்தரபாண்டி, பாண்டியம்மா மாறுவேடத்தில் இருக்கின்றனர். மேலும், கருப்பு என்ற ரவுடி ஒருவன் சமையல் காரன் கெட்டப்பில் கோவிலுக்குள் அழைத்து வருகிறான். அப்போது, நீ இசக்கியை இங்கே கூட்டிக்கிட்டுவா, நான் அவளை அருவாளால் ஒரே வெட்டா வெட்டிவிட்டு, அருவாளை உன்கிட்ட தருகிறேன். நீ என் அந்த கைரேகையை அழித்துவிடு என்று சொல்ல, அந்த ரவுடி அதுக்குத்தானே வந்து இருக்கிறேன். அதை சரியா செய்துவிடுகிறேன் என்கிறான்.
இசக்கி உயிர் பிழைப்பாளா: இதையடுத்து, கோவிலில் சமையல் காரன் கெட்டப்பில் இருக்கும் ரவுடி, முத்துப்பாண்டி ஐயா உங்களை, பார்க்க வர சொன்னாரு என்று சொல்ல இசக்கியிடம் சொல்லி, இசக்கி கிளம்பி செல்கிறாள். அங்கே சௌந்தரபாண்டி அரிவாளுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











