இனி ரத்னாவுடன் வாழ முடியாது.. வெங்கடேஷ் எடுத்த முடிவு.. அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னா ரிசப்ஷனில் இருந்து வீட்டிற்கு வந்ததால், கடுப்பான வெங்கடேஷ், ரிஸப்ஷனை நிறுத்துமாறு சொல்கிறான். அவனின் அம்மா, அப்பா அவ விளக்கு போடத்தானே போயி இருக்கா வந்துவிடுவா என்று சொல்லி சமாதானம் செய்தும் வெங்கடேஷன் சமாதானம் ஆகாமல், இதுக்கு மேல, என்னால விட்டு கொடுத்து போக முடியாது என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி ஷண்முகம் வீட்டிற்கு வருகிறான்.

ரத்னாவிடம் உனக்காக நிறைய விட்டு கொடுத்து போய்ட்டேன், இனிமேலும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு தேதியை சொல்றேன், அந்த தேதியில் வந்து தாலியை கழட்டி கொடுத்திட்டு போ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ரத்னா, நான் மாமா கிட்ட சொல்லிட்டுத்தாங்க வந்தேன் என்று சொல்ல, நான் ஒன்னும் செத்து போகலேயே நீ என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே என்று சொல்லி சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: இன்றைய எபிசோடில், சண்முகம் குடும்பத்தினர் அனைவரும், ரத்னா எத்தனை முறை படிச்சி படிச்சி சொன்னேன் ரிசப்ஷன்ல போ, இங்கே வராதேனு கேட்டியா, மாப்பிள்ளை மேல தப்பு சொல்ல முடியாது. அவர் நமக்காக நிறைய செய்து இருக்கிறார். உன் மேலதான் தப்பு ரத்னா என்று சொல்கின்றனர். அப்போது, ரத்னா நான் எந்த தப்பும் பண்ணல வெங்கடேஷோட தாய் மாமா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். ஆனால், அவர் எதுக்கு இப்படி மாத்தி பேசுறாருன்னு எனக்கு தெரியல என்று சொல்லி அழுகிறாள்.

கண்கலங்கும் சண்முகம்: பிறகு சண்முகம், வெங்கடேஷ் குடும்பத்துடன் தான் பேசுவதாக சொல்கிறான். உடனே ரத்னா நீங்க எதுக்கு பேசணும் வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் சண்முகம் ஒரு அண்ணனாக உன்னோட வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என்னுடைய கடமை என வாக்கு கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து சண்முகம் நைட் நேரத்தில் தனியாக உட்கார்ந்து சூடாமணி உயிரோட இருக்கும்போது என்ன பிரச்சனை வந்தாலும் பொறுமையா நிதானமா இருந்து தங்கச்சிகளோட வாழ்க்கையை சரி செய்ய வேண்டியது உன்னுடைய கடமை என அறிவுரை வழங்கியதை நினைத்து பார்க்கிறான்.

கடுப்பான முத்துப்பாண்டி: இந்த நேரத்தில் முத்துப்பாண்டி இசக்கிக் போன் செய்து, எப்போ வீட்டுக்கு வருவீங்க என்று கேட்க, அவள் வீட்டில் பிரச்சனை நாளைக்கு வருவதாக சொல்லிவிட்டு, பாக்யாவிடம் போனை தருகிறாள். அப்போது பாக்யா, அத்தைக்கு விளக்கு போட்டு எறியவே இல்லை. இதனால், ரத்னா ரிசப்ஷனில் இருந்து வந்துவிட்டாள்.வெங்கடேஷ் தாலியை கழட்டி கொடு என்று சொல்லுகிறான். இதற்கு எல்லாம் காரணம் அந்த தாய் மாமான் தான் என்று சொல்ல, முத்துப்பாண்டி, அவன் ரத்னாவின் நிச்சயத்தில் இருந்தே இப்படித்தான் செய்கிறான். கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறான்.

ரத்னாவுடன் சேர்ந்து வாழ முடியாது: மறுநாள் காலையில் வீரா பரிச்சையில் பாஸ் ஆகி விட்டதாகவும் ட்ரைனிங்கிற்கு வர சொல்லி லெட்டர் வருகிறது. இதைத் தொடர்ந்து சண்முகம் குடும்பத்தினர் வீராவை டிரைனிங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து சண்முகம் மற்றும் பரணி என இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து ரத்னா வாழ்க்கையை சரி செய்வதை பற்றி பேசுகின்றனர். ரத்னாவுடன் வாழ முடியாது என சொன்ன வெங்கடேஷ் இனி எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X