மில்லில் நடந்த தரமான சம்பவம்.. அதிர்ந்து போன ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்திக் பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைக்கேட்டு கடுப்பான ஆனந்த், என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்கிறான்.
நான், அப்பா, அருண் மூணு பேரும் மில்லுல இரவும் பகலுமா உழைத்ததுனால தான் இவன் வெளிநாட்டுல படிச்சு ஏசில உட்கார்ந்து வேலை பார்க்க முடியுது, ஒரு மாசம் அவனை மில்லுல வேலை பார்க்க சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்ல சவாலை ஏற்றுக்கொள்ளும் கார்த்திக், நீ சொல்ற மாதிரி நான் வேலை பார்க்குறேன். ஆனால் அதுக்கு பிறகு, சொத்தை பிரிக்கிறது பத்தி பேசவே கூடாது என்று செக்மேட் வைக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து கார்த்திக்கை எப்படியாவது தோற்கடித்து சொத்தை பிரிக்க வேண்டும் என பிளான் போடுகின்றனர். மறுபக்கம் மீனாட்சி ஆனந்த் மீது பயங்கர கோபத்தில் இருக்க அங்கு வந்த தீபா அவர்களை கூல் செய்து கார்த்திக் சார் எடுத்த முடிவை பற்றி சொல்கிறாள். பிறகு அங்கு வரும் கார்த்திக், ஒரு மாசம் மில்லில் வேலை பார்க்கப் போற விஷயத்தை சொல்ல தீபா நீங்க எடுத்தது நல்ல முடிவு என்கிறாள்.
பூஜை செய்யும் அபிராமி: அண்ணன் தம்பி உள்ளுக்குள்ள பிரிவும் வரக்கூடாது அதே சமயம் சொத்தும் பிரிய கூடாது என தீபா சொல்லிக் கொண்டிருக்க அபிராமி பூஜை தட்டுடன் அங்கு வருகிறாள். அவளும் கார்த்திக்கிடம் நீ எடுத்தது நல்ல முடிவு தீபா சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் ஒண்ணா இருக்கணும் இந்த சொத்தும் பிரிய கூடாது என சொல்கிறாள். மேலும் கார்த்திக் கையில் ஒரு சாமி கயிற்றை கட்டிவிட்டு இது உனக்கு துணையா இருக்கும் என சொல்கிறாள்.
மாஸ்டர் பிளான் போடும் ஆனந்த்: அடுத்ததாக அருண் ஆனந்த் மில்லுக்கு வர மேனேஜர் வந்து ரெண்டு மணி நேரமா மிஷின் போடல அதனால நாலு லட்சம் ரூபாய் லாஸ் என சொல்கிறார். மேடம் இன்ஜினியரை வர சொல்லி இருப்பதாக சொல்ல தனியாக செல்லும் ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு யார் போன் பண்ணி கூப்பிட்டாலும் வரக்கூடாது என சொல்கிறான்.
கார்த்தி வந்த முதல் நாளே லாஸ் ஆன மாதிரி இருக்கணும் என பிளான் போடுகிறான். மில்லுக்கு வரும் கார்த்திக் மிஷின் ஓடாத விஷயம் தெரிந்து அவனே மெஷினை ரிப்பேர் செய்கிறான். திடீரென மிஷின் ஓடும் சத்தம் கேட்டு அருண், ஆனந்த் வெளியே வர மிஷினை ரெடி பண்ணது கார்த்திக் தான் என தெரிந்து ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











