உடம்புல ரத்தம் சுண்டியதும் மன்னிப்பா? நீ அனாதை பிணமாதான் போவ.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கார்த்திக், பாட்டியை காளி கோவிலுக்கு வர சொல்லி இருந்த நிலையில் ராஜராஜனை சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டதால் அவன் வீட்டிலேயே இருந்து விடுகிறான். இங்கே பரமேஸ்வரி பாட்டி, காளி கோவிலுக்கு வந்து காத்திருக்க கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி மட்டுமே கோவிலுக்கு வருகின்றனர். ராஜராஜன் வராததை பார்த்து பாட்டி ஷாக் ஆகிறாள்.
பிறகு கார்த்திக் பாட்டியை தனியாக சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல என் பையனை என்னால் பார்க்கவே முடியாதா என்று கண் கலங்குகிறாள். நானே போய் மன்னிப்பு கேட்டு என் பையனை பார்க்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரியிடமே கேட்கிறேன் என்று கிளம்பி வர கார்த்திக் தடுக்க முயற்சி செய்தும் பாட்டி, சாமுண்டீஸ்வரியை பார்க்க வந்து விடுகிறாள். பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி, ஆத்திரத்தில் ஆத்தா காளி, நான் உன்ன பாக்க வந்தேன். ஆனா கோவில்ல இவங்கள பாக்க வெச்சிட்டியே? என்ன மறுபடியும் கொலைகாரியா ஆக்கிவிடாதே என்று கத்துகிறாள். இதை பார்த்த பரமேஸ்வரி, கோவில்ல கோபப்படாதமா? நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு, எனக்கு என் பையன பாக்கணும் என்று சொல்ல, என்னது பையன பாக்கணுமா? இப்படி தானே எங்க அம்மா அன்னைக்கு உங்ககிட்ட கெஞ்சுனாங்க. நாங்க தப்பு செய்யலனு, அப்ப நீங்க ஒரு நிமிஷம் எங்க அம்மாவ பத்தி யோசித்து இருந்தீங்கன்னா எங்க அம்மா இறந்து இருக்க மாட்டாங்க நாங்களும் அனாதையா ஆகி இருக்க மாட்டோம். அப்போ எல்லாம் நீங்க யோசிக்காமல், இப்போ உடம்புல ரத்தம் சுண்டினதும் மன்னிப்பு கேக்குறீங்களா? நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க மகன நீங்க பார்க்கவே முடியாது. அதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற தண்டனை. நீங்க அனாதை பிணமாதான் சாவீங்க உங்களுக்கு கொள்ளி போடறதுக்கு கூட உங்க பையன நான் அனுப்ப மாட்டேன் என்று கத்துகிறாள்.
ஆத்திரத்தில் கத்திய சாமுண்டீஸ்வரி: உடனே பரமேஸ்வரி, இப்படி எல்லாம் பேசாத அம்மா, நாங்க தப்புதான் செஞ்சோம் எங்களை மன்னிச்சிடு என் மகனை பாக்கணும். அவ்வளவுதான் என்று சொல்ல. உங்க மகனை நீங்க பார்க்கவே முடியாது. நீங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா அதோட உங்களுடைய மகனோட நான் வாழவே மாட்டேன் என்னோட பசங்களும் பார்க்க அனுமதிக்க மாட்டேன் இத மனசுல வச்சுக்கோங்க வீட்டு பக்கம் வந்துராதீங்க என்று கோவிலிருந்து சாமுண்டீஸ்வரி கோவமாக கிளம்புகிறாள். எல்லாம் பாத்துட்டு இருந்த கார்த்திக் எதுவுமே சொல்ல முடியாம அப்படியே சில போல நிக்கிறான்.அ என்னதான் இருந்தாலும் சாமுண்டீஸ்வரி இப்படி பாட்டி கிட்ட பேசி இருக்கக் கூடாது என்று மனதிற்குள் கஷ்டப்படுகிறான்.
மன்னிக்கவே மாட்டேன்: இதையடுத்து, கார்த்திக் காரை நிறுத்திட்டு, அவங்க பெரியவங்க அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறாங்க இத்தனை வருஷமா, அப்பா அம்மாவை பிரிச்சி வெச்சிட்டீங்க, இதுக்கு மேலயும் உங்களுக்கு என்ன கோவம் அவங்கள நீங்க மன்னிச்சிடலாமே என்று கார்த்திக்கு சாமுண்டீஸ்வரியிடம் கேட்க, என்னது மன்னிப்பா? நான் எதுக்கு மன்னிக்கணும், அவங்க எங்க அம்மாவ மன்னிச்சாங்களா? எங்க அம்மா இப்போ உயிரோட இல்ல. அம்மா இல்லாம எப்படி கஷ்டப்பட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதே கஷ்டத்தை அவங்க படணும். நான் அவர்களை எந்த காலத்துக்குமே மன்னிக்கவே மாட்டேன் என்கிறாள் .
அதே மாதிரி என்னோட குடும்ப விஷயத்துல நீ இனிமே தலையிடாதே தேவையில்லாமல் பேசாதே என்ற சொல்ல, நான் தான் ராஜசேதுபதியோட பேரன் என்று சொல்லிவிடலாமா என்று யோசிக்கிறான். ஆனால்,உண்மையை சொல்வதற்கு இது சரியான நேரம் இல்லை. இந்த குடும்பத்தை நாம தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து அமைதியாகி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











