ரம்யாவை விசாரிக்கும் கார்த்திக்.. அந்த போலி சாமியார் யார்? கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலில் தீபா கண்கலங்கி பாடிக்கொண்டு இருக்க அபிராமிக்கு உடலில் அசைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அபிராமி கண் திறக்கிறாள். இந்த விஷயத்தை கேள்விபட்டு அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு வரும் ரம்யா நான் பரிகாரம் செய்ததால் தான் நீங்க பொழச்சீங்க என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறாள். இதைக்கேட்டு தீபா வருத்தப்படுகிறாள்.

இதையடுத்து, ஏன் தீபா இப்படி ஒரு பரிகாரத்தை பண்ணீங்க,யார் அந்த சாமியார் என்று விசாரிக்கிறார் கார்த்திக். அப்போது தீபா,அத்தைக்கு இப்படி ஆனதும், எனக்கு என்ன செய்வது என்றே தெரியல, அப்போது மைதிலி அண்ணி தான் செங்கல்பட்டில் ஒரு சாமியார் இருக்கிறார் என்று சொன்னாங்க, இது பற்றி நான் ரம்யாவிடம் சொன்னேன். அவள் தான் சாமியாரை தேடிப்பிடித்தாள். அவள் தான் பரிகாரம் குறித்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், தீபாவிடம் பரிகாரம் குறித்து விசாரித்துக்கொண்டு இருக்க, இனிமேல் இதுபோன்ற பரிகாரத்தை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்விட்டு, நீங்க வீட்டுக்கு போங்க நான் அம்மாவிடம் இருந்துவிட்டு வருகிறேன் என்கிறான். இதையடுத்து, தீபாவை சாமியாரிடம் அழைத்து போனதே ரம்யா தான், ஆனால், நாம போன் செய்து தீபா பற்றி கேட்ட போது ஏன் ரம்யா சொல்லவில்லை என்று யோசனை வருகிறது.

அது போலி சாமியார்: இதையடுத்து, வீட்டிற்கு வரும் தீபாவிடம் என்ன தீபா இப்படி செய்துட்ட, எங்கே போன என்று தெரியாமல் எல்லாரும் ரொம்ப பதறிவிட்டோம் என்று சொல்ல, அண்ணி நீங்க ஒரு சாமியார் பற்றி சொன்னீங்க இல்லையா அங்கே தான் போய் இருந்தேன் என்கிறாள். அவர் தான் பரிகாரம் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்கிறாள். சரி அந்த சாமியார் பெயர் என்ன என்று மைதிலி கேட்க, தீபா வேறு ஒரு பெயரை சொல்ல இது நான் சொன்ன சாமியார் இல்லையே என்கிறாள்.

பதறும் ரம்யா: மறுபக்கம், ரம்யாவிற்கு போன் செய்யும் கார்த்திக், ரம்யா எங்கே இருக்கீங்க என்று கேட்க, நான் இப்போ தான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்கிறாள். நான் உங்களை பார்த்து பேச வேண்டும் என்று சொல்ல, பதற்றம் அடையும் ரம்யா, இப்போ தானே ஹஸ்பிட்டல்ல பார்த்தோம் அதுக்குள்ள பார்க்க வேண்டும் என்று சொல்லாரே என்னவாக இருக்கும் என்று பதறுகிறாள்.

கார்த்திக்கிற்கு வரும் சந்தேகம்: ரம்யாவை சந்தித்த காத்திக், தீபா பரிகாரம் குறித்து எல்லா விஷயத்தையும் என்னிடம் சொல்லிட்டாங்க, எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும், சாமியாரிடம் கூட்டிப்போனதே நீங்க தான், அப்புறம் ஏன் இது பற்றி என்னிடம் சொல்லவில்லை என்று கேட்க, தீபாவுக்காக செய்ததாகவும் சாமியார் தான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லிவிட்டதாகவும் சொல்கிறாள். இதையடுத்து, கார்த்திக் அந்த சாமியார் மேல எனக்கு சந்தேகமா இருக்கு அவரை நான் பார்க்கணும் என்று சொல்ல ரம்யா பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X