மரண வாக்கு மூலம் கொடுத்த தீபா.. மகிழ்ச்சியில் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரியா கேமிரா மேனுக்கு போன் செய்து வீடியோவை கேட்டு மிரட்டுகிறாள். இதையடுத்து, கேமிரா மேனுக்கு போன் செய்து வீடியோவை கேட்க, சார் அந்த வீடியோவை தரவில்லை என்றால், என் குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று ரியா மிரட்டுறாங்க, நான் எப்படி உங்களுக்கு தருவது என்று சொல்கிறான். உங்க குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாது, எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கார்த்திக் வாக்கு கொடுக்கிறான். இதையடுத்து ரியா, ஐஸ்வர்யாவுடன் அந்த வீடியோவை வாங்க வருகிறாள்.
ரியா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு கேமரா மேனிடம் வீடியோவை வாங்க வருகின்றனர். ஏதாவது தப்பு நடந்தால் நாம மாட்டிக்கக்கூடாது என்று திட்டம் போட்ட ரியா, ஐஸ்வர்யாவை அனுப்பி நான் தான் ரியா என்று சொல்லி, கேமரா மேனிடமிருந்து வீடியோவை வாங்கவர சொல்கிறாள். ரியாவின் திட்டம் எதுவும் தெரியாத ஐஸ்வர்யா, கேமரா மேனிடம் சென்று நான் தான் ரியா என்று சொல்லி வீடியோவை கேட்க, கேமரா மேன் தயாராக வைத்து இருந்த கயிறை எடுத்து அவளை கட்டிப்போட்டு விடுகிறான். இதை தூரத்தில் இருந்த பார்த்த ரியா, அந்த இடத்தில் இருந்து ஓடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபா, ரம்யாவை சந்தித்து, அத்தையின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு பிழைப்பது ரொம்ப கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அவங்க பிழைக்க வேண்டும், அவங்க நல்லபடியாக குணமாகி வந்து எனக்கு தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக நான் அந்த பரிகாரத்தை செய்தே ஆக வேண்டும் என்று சொல்கிறாள். உடனே ரம்யா, என்ன தீபா பேசுற, நான் கண்டிப்பா அந்த சாமியார்கிட்ட கூட்டிக்கிட்டு போகமாட்டேன். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது இனிமேல் இதைப்பத்தி பேசாதே என்று சொல்கிறாள்.
பரிகாரம்: அப்போது கதறி அழும் தீபா, இந்த பரிகாரத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. தெரிந்தும் நான் செய்யாமல் போய், அப்புறம் அத்தைக்கு எதாவது ஆனால், என்னால நிம்மதியாகவே இருக்க முடியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, துணிந்து ஒரு முடிவு எடுத்த தீபா, போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு, என் முழு மனதுடன் தான் செய்கிறேன். இந்த பரிகாரத்தில் எனக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்று பேசி அந்த வீடியோ ரம்யாவிற்கு அனுப்புகிறாள். ரம்யா இனிமேல் நீ பயப்படவேண்டாம், எனக்கு எதாவது ஆச்சுனா இந்த வீடியோவை என் குடும்பத்திடமும், என் கணவரிடமும் காட்டு என்று சொல்ல, ரம்யா மனதிற்குள் சந்தோஷப்பட்டு துள்ளி குதிக்கிறாள்.
சந்தேகப்படும் அருண்: மறுபக்கம் வீட்டில், ஐஸ்வர்யா தனது ரூமில் படுத்துக்கொண்டு இருக்க வீட்டிற்கு வரும் அருண், என்ன படுத்துட்டு இருக்க போய் எழுந்து மூஞ்சு கழுவிட்டுவா என்று சொல்கிறான். இதையடுத்து, ஐஸ்வர்யா படுக்கையில் இருந்து எழுந்து செல்கிறாள். தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறான் அருண். இதையடுத்து, அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











