அபிராமியின் தாலி.. கார்த்திக்கிடம் காதலை சொல்லுவாளா ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக், அபிராமிக்கு திதி கொடுப்பதை சாமுண்டீஸ்வரியுடம் காட்டி பிரச்சனை செய்யலாம் என்ற திட்டத்தோடு, சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை கோவிலுக்கு அழைத்து வருகிறாள். இதை தெரிந்து கொண்ட ரேவதி, சாமிக்கு அருள்வந்து ஆடுவது போல நாடகமாடுகிறாள், மேலும், சந்திரகலா, பால் குடம் எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என சொல்ல, வேறு வழியே இல்லாமல் சந்திரகலா செய்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் ரேவதியால் சந்திரகலாவின் திட்டம் பாழாகி விடுவதால், சந்திரகலா ரேவதி மீது கடுமையான கோவத்தில் இருக்கிறாள். மறுபக்கம் திதி கொடுத்துவிட்டு, கார்த்தி பரமேஸ்வரி பாட்டியிடம், நான் சென்று வருகிறேன் என்று சொல்ல, அப்போது பாட்டி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் கார்த்திக் ராஜா என இரட்டை வேஷம் போடுவா, கும்பாபிஷேகம் நடந்தா எல்லாம் மாறிவிடும் என நினைத்தேன் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என புலம்புகிறாள். உடனே, கார்த்திக் அதற்கான நேரம் நிச்சயமாக வரும் பாட்டி, அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: ரேவதியின் சதியால், வீட்டிற்கு நடந்தே வரும் சந்திரகலா, ரேவதியை கூப்பிட்டு எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்துட்டியே என்று பேச, ரேவதி எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல, என்ன நடந்துச்சு என்று ஒன்றும் தெரியாதது போல நடித்து நிலைமையை சமாளிக்கிறாள். அதைத்தொடர்ந்து, சந்திரகலா கார்த்திக்கை சந்தித்து என்ன கார்த்திக், ராஜா, உங்க டபுள் முகத்தை எப்படி சமாளிக்கிறீங்க என்று கேள்வி கேட்டு கூடிய சீக்கிரம் நீங்கள் மாட்டுவீங்க என்று எச்சரிக்கிறாள். அப்போது, கார்த்திக் உங்களால் முடிஞ்சா, நான் யார் என்று சொல்லுங்கள், இன்னும் 6 மாதத்திற்குள் எல்லா உண்மையையும் நானே அத்தையிடம் சொல்லிவிட்டு இந்த வீட்டை விட்டு வெளியில் போய்விடுவேன் என்கிறாள். இதை கேட்ட, சந்திரகலா, அதற்கு வாய்பே இல்லை, நானே உன்னை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறேன் என்கிறாள்

ரேவதியிடம் வந்த தாலி: மறுநாள், பரமேஸ்வரி பாட்டி ரேவதியை சந்தித்து அபிராமியின் தாலியை கொடுத்து, இது உனக்கு சேர வேண்டியது, அபிராமியோட தாலி, இதை நீ பத்திரமாக வைத்துக்கொள் என்கிறாள். ரேவதியும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறாள். அதன் பிறகு ரேவதியின் மனசாட்சி அவள் முன் தோன்றி, கார்த்தியிடம் காதலை சொல் என்று சொல்ல ரேவதி தனது காதலை சொல்ல முடிவெடுக்கிறாள். பிறகு கார்த்தியிடம் சென்று பேசப் போக அவனது முகத்தை பார்த்ததில் பேச்சு வராமல் இருக்கிறாள். பிறகு ரேவதி ரூமுக்கு வந்துவிட மீண்டும் அவள் முன் தோன்றும் மனசாட்சி இதுதான் காதலை சொல்றதா என்று கேள்வி கேட்க ரேவதி இந்த முறை கண்டிப்பாக சொல்லி விடுகிறேன் என்று சொல்கிறாள்.

அதைத் தொடர்ந்து இளையராஜா பாடுவதற்காக ஒருவரை ஏற்பாடு செய்ய சொல்லி கேட்க கார்த்திக் சுவாதியை பாட சொல்லி சென்னைக்கு அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் கார்த்தி ரேவதி மற்றும் சுவாதி ஆகியோர் கிளம்பி வர சந்திரகலா இவர்களை தடுத்து நிறுத்துகிறாள்‌. எங்க போறீங்க என்று கேட்க சென்னை போவதாக சொல்கின்றனர். சுவாதியும் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று சொன்னதால கூட்டிட்டு போறோம் என்று சமாளிக்கின்றனர். சந்திரகலா நானும் வரேன் என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X