தாலியை கழட்டிய தீபா.. பேராபத்தில் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், குண்டு காயம்பட்ட அபிராமியை செக்கப் செய்த டாக்டர் கார்த்தியை உள்ளே அழைத்து, மூணு இடத்துல குண்டு பாய்ந்து இருக்கு.. உடனடியா ஆபரேஷன் பண்ணியாகனும். அப்போதும் பிழைக்க 20% தான் வாய்ப்பு இருக்கு என்று பேரதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து ஆப்ரேஷனுக்காக வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நேரத்தில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு ஒரு இடத்திற்கு வர சொல்ல ஐஸ்வர்யா முடியாது என்று சொல்ல உன்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவேன் என்று மிரட்டி சம்மதிக்க வைக்கிறாள். பிறகு ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நழுவ முயற்சி செய்கிறாள். ஆனால், ஐஸ்வர்யாவை விசாரிக்கக் வேண்டும் என்று அழைத்து செல்கிறார்கள். அப்போது ரியாவிடம் இருந்து போன்வர வசமாக மாட்டிக்கொள்கிறாள் ஐஸ்வர்யா, இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

அபிராமிக்கு ஆப்ரேஷன்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், போலீசில் சிக்கிய ஐஸ்வர்யா நான் பேசியது அந்த ரியா இல்ல, அது வேறு ரியா என்று சொல்லி வீடியோ கால் செய்து வேறொரு பெண்ணை காட்டி தப்பித்து விடுகிறாள். இதனை தொடர்ந்து அபிராமியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்ல அருணாச்சலத்திடம் கையெழுத்து கேட்க அவர் நான் போட மாட்டேன், அவள் பிழைத்து வரவில்லை என்றால், கடைசி வரைக்கும் நான் குற்ற உணர்ச்சியிலேயே செத்து போய்டுவேன் என்று உடைந்து அழுகிறார்.

பரோட்டா சாப்பிட்ட ஐஸ்வர்யா: இதையடுத்து அருணிடம் கொடுக்க அவனும் கையெழுத்து போட தயங்க ஆனந்தும் அப்படியே சொல்ல கார்த்திக் கண்ணீருடன் கையெழுத்து போட அபிராமிக்கு 36 மணி நேரம் நடக்க உள்ள ஆபரேஷனுக்கான முதற்கட்ட பரிசோதனைகள் தொடங்குகிறது. அனைவரும் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா நைசாக நழுவி வெளியே வந்து ஒரு ஓட்டலுக்கு சென்று பரோட்டா, சிக்கன் என்று விதவிதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருக்க அருண் அங்கு வர இவன் நம்மள பார்த்தா பெரிய பிரச்னையாகிடுமே என்று டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறாள்.

Television zee tamil Karthigai Deepam Serial

அருண் ஓட்டலில் தண்ணீர் கேட்க உள்ள வந்து குடிங்க என்று சொல்லி கூப்பிட ஐஸ்வர்யா டேபிள் அருகே வந்து தண்ணீர் குடிக்க ஐஸ்வர்யா மறைந்தபடியே இருக்க ஒரு கட்டத்தில் அவளை பார்த்து விட அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விடுகிறான்.

தாலியை கழட்டிய தீபா: பிறகு ஹாஸ்பிடலில் முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது என் தாலியை காப்பாற்றி அபிராமிக்காக இந்த தாலியை கழட்டி வைக்கிறேன். நீங்க உயிரோடு வந்து இந்த தாலியை எடுத்துக் கொடுக்கணும், கார்த்திக் சார் கையால் என் கழுத்தில் தாலி கட்டுறதை பார்க்கணும், பார்ப்பீங்க அது வரைக்கும் மஞ்ச கயிறோடு தான் இருப்பேன் என்று கழுத்தில் இருக்கும் தாலி செயினை கழட்டி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X