தீபாவை தீர்த்துக்கட்ட பிளான் போட்ட ரம்யா.. கதறி அழுத ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமிக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருக்க, தீபாவின் அண்ணி, நம்ம குடும்பத்திற்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் பிரச்சனை வருது என்றே தெரியல. எதாவது தெய்வ குத்தமாகக்கூட இருக்கலாம். எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்காரு அவரிடம் போய் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்றார்.
இதைக்கேட்ட தீபா, அபிராமி அத்தைக்காக நான் நிச்சயம் என்ன பரிகாரமாக இருந்தாலும் செய்வேன் என்று, அந்த ஜோசியர் பற்றிய தகவலை ரம்யாவிடம் சொல்லி, அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரிக்க சொல்கிறாள். இதுதான் சரியான நேரம் என்று யோசித்த ரம்யா, தன்னுடைய ஒரு ஆளை, ஜோசியராக நடிக்க வைக்க திட்டம் போடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

போலீசார் விசாரணை: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், போலீஸ்காரர்கள் அபிராமியை சுட்டது யாராக இருக்கும் என விசாரணை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அனைவருமே, ரியா சுட்டார் என்று சொல்கின்றனர். ஆனால், துப்பாக்கியில் ஆனந்தின் கைரேகை தான் இருக்கிறது, ரியாவின் கைரேகை இல்லை என சொல்கின்றனர். அதேபோல் சிசிடிவி கேமராவிலும் ரியா குறித்து எந்த ஆதாரமும் இல்லை என சொல்கின்றனர். இந்த துப்பாக்கி சூட்டுக்கு பிறகு கேமராமேன் சம்பவ இடத்தில் இல்லை இதனால் அவன் மேலயும் சந்தேகம் இருக்கிறது என்று சொல்கின்றனர்.
போலி சாமியார்: அடுத்ததாக ரம்யா வீட்டுக்கு வர அவருடைய அப்பா, அபிராமி எப்படி இருக்காங்க என்று கேட்பதோடு கார்த்திக்கிற்கு போன் செய்து தர சொல்லி அபிராமி குறித்து நலம் விசாரிக்க கார்த்திக் தற்போதைய நிலவரத்தை சொல்கிறான். பிறகு ரம்யா வெளியே கிளம்பும்போது சாமியார் வேடத்தில் சேகர் வந்து நிற்கிறான். ரம்யா யார் நீ என்று கேள்வி கேட்க, அவன் நான்தான் மேடம் சேகர் என்று சொல்கிறான். உங்களுக்கே என்னைய அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இப்பவே நாம பாதி ஜெயிச்சுட்டோம் என்று சொன்னதும் ரம்யா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ரகசியமாக சொல்கிறாள்.

கதறி அழுத அருணாச்சலம்: அதன் பிறகு அருணாச்சலம் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து அபிராமியை நினைத்து அழுது புலம்ப அனைவரும் அங்கு ஒன்று கூடி விடுகின்றனர். எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆனந்த் தான் இவனை போட்டு அடித்துக் கொல்லுங்கள் என்று ஆவேச பட தீபா, நீங்க இப்படி வருத்தப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க மாமா, நான் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன் என்று உள்ளே செல்கிறாள். அப்பா அழுது புலம்புவதை பார்த்த ஆனந்த்,எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்னை மன்னிச்சிடுங்க என்று அருணாச்சலத்திடம் மன்னிப்பு கேட்கிறான். அருணாச்சலத்துக்கு பால் கொண்டு வந்த தீபா, ரியா பத்தி பேப்பர்ல செய்தி வந்திருக்கு கூடிய சீக்கிரம் போலீஸ் அவள கண்டுபிடிச்சிடுவாங்க என்று ஆறுதல் சொல்கிறாள்.
10 லட்சம் பரிசு: ரியாவை கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் என பேப்பரில் விளம்பரம் வந்திருப்பதால் ஐஸ்வர்யா பேசாம நாமளே பிடிச்சு கொடுத்துட்டு பத்து லட்சத்தை வாங்கிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்க, ரியா போன் செய்து பேப்பர்ல நியூஸை பார்த்து மாட்டி விட்டுடலாம்னு யோசிக்காலும் யோசிப்ப, அப்படி செய்தால், உன் அம்மாவையும் உன்னையும் கொன்னுட்டு போயிட்டே இருப்பேன் என்று எச்சரிக்கிறாள்.

வைர கம்மல்: ஐஸ்வர்யா நான் அப்படியெல்லாம் யோசிக்கல என்று சமாளித்து உன்கிட்ட இருக்க வைரத்தோட மதிப்பு எவ்வளவு இருக்கும்? நீ அதெல்லாம் என்ன பண்ணுவ என்று கேட்க ரியா, உன்கிட்ட கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதை இப்பவே கொடுத்துடு என ஐஸ்வர்யா கேட்கிறாள். ரியா எதுக்கு உன்கிட்ட வைரத்தை கொடுத்து பிறகு நான் ஜெயிலுக்கு போறதுக்கா என்று மடக்கி கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











