வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திக் எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றை எபிசோடில், ரியாவின் முதல் கணவரை சந்திக்கிறான் கார்த்திக், ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ, ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன் அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி விவாகரத்து வாங்கிக்கிட்டோம் என்று சொல்கிறான்.
பிறகு கார்த்திக் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு நல்ல குரலில் பாட்டு கேட்க திரும்பிப் பார்க்க ஒரு துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் பாடுவதை கேட்டு கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். நீங்க நல்லா பாடுவீங்களா? கச்சேரியில பாட ஆசை இருக்கா? உங்களுக்கு நான் வாய்ப்பு தரேன் என ஆபிஸ் விசிட்டிங் கார்டை கொடுத்து தன்னை வந்து ஆபீஸில் சந்திக்குமாறு சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அழகாக பாடிய ராணி: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று, ராணி பாட வராத நிலையில் கார்த்திக் நான் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அவங்க வரல சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று ஆபீஸில் பேசிக் கொண்டிருக்கும்போது ராணியும் அவருடைய கணவரும் வருகின்றனர். நீங்க சொன்ன மாதிரி நான் பாட ரெடி சார் என்று சொல்ல அவளது கணவர் அவளுக்குள் இருக்க திறமைக்கு நானே முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறன் என்று வருந்துகிறார். பிறகு ராணி பாடி முடிக்கிறார்.

அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி: அடுத்ததாக தர்மலிங்கத்தை வீட்டுக்கு கூட்டி வர கார்த்திக் அவரை வீட்டில் வந்து சந்தித்து நலம் விசாரிக்கிறான். இந்த நேரம் பார்த்து அங்கு வரும் சேட்டு, தர்மலிங்கம் இந்த வீட்டை எனக்கு வித்துட்டாரு, அந்தப் பணத்தை வைத்து தான் தீபாவுக்கு நகை போட்டாரு என்ற உண்மையை உடைக்கிறார். அதோடு தர்மலிங்கம் ஏற்கனவே இந்த வீட்டை காலி பண்ணி இருக்க வேண்டும் இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை அதனால் கொஞ்ச நாள் இருந்துட்டு கூட காலி பண்ணட்டும் ஆனா சீக்கிரம் காலி பண்ணிடுங்க என்று சொல்ல கார்த்திக் இந்த வீட்டை எவ்வளவுக்கு வித்தாரு அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் வீட்டை திருப்பிக் கொடுத்துடுங்க என்று கேட்கிறான்.

வீட்டை விற்றுவிட்டார்: ஆரம்பத்தில் இந்த வீட்டை வாங்குற எண்ணம் எனக்கு இல்ல ஆனா, அதன் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த வீட்டிலிருந்து என்னுடைய பசங்களுக்கு ஸ்கூல் எல்லாமே பக்கத்துல இருக்கு அதனால வீட்ட திருப்பி கொடுக்கிற எண்ணம் இல்லை என சொல்கிறார் சேட்டு. இதனால் வீட்டை காலி செய்துவிட்டு, அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











