மகேஷ், மாயாவின் ரகசிய உறவு.. அதிர்ச்சியில் ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல் !
சென்னை: சாமுண்டீஸ்வரி தான் மகேஷை கடத்தி வைத்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ரேவதி, யாருக்கும் தெரியாமல் மகேஷை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு வருகிறாள். கட்டப்பட்டு கிடக்கும் மகேஷை காப்பாற்றுகிறாள். இங்கிருந்து தப்பித்து போ என்று சொல்ல அவன் ரேவதியை வா எங்கேயாவது போய் விடலாம் என்று சொல்கிறான். ஆனால் ரேவதி தனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. அதெல்லாம் சரியா வராது நீ தப்பித்து போ என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் ரவுடிகள் அங்கு வந்து விடுகின்றனர். ரவுடிகள் மகேஷை பிடிக்க முயலும் போது அவனை கத்தியால் குத்தி விட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்து, ரேவதி வீட்டில் இல்லாததால் அவள் எங்கே போய் இருப்பாள் என்று பயந்து போன, கார்த்திக் அவளை தேடிச்செல்கிறான். அப்போது, ரேவதி குடோனில் இருப்பது தெரிந்து கார்த்திக் அங்கு செல்கிறான். அப்போது, ரவுடிகள் கார்த்திக் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி செல்ல, மகேஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து பதறிப்போன கார்த்திக், மகேஷை மீட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். சாமுண்டீஸ்வரி குடோனுக்கு வர அங்கு யாரும் இல்லாததை பார்த்து குழப்பம் அடைகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், அதாவது, ரேவதிக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ரேவதி எந்த பிரச்னையும் செய்யாமல் அமைதியாக, கார்த்திக் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறாள். இத்தனை நாளா மகேஷை கடத்தியது ராஜா தான் என்று நினைத்து இருந்தேன். ஆனால், அவர் கடத்தவில்லை. அதே போல, மகேஷ் எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் அவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை, நான் என்னென்ன வார்த்தையால் திட்டி இருக்கிறேன் என்று நினைத்து பார்த்து வருத்தப்படுகிறாள் ரேவதி. இதைத்தொடர்ந்து, தாலி மாற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிகிறது.
கண்விழித்த மகேஷ்: மறுபக்கம் மருத்துவமனையில் கண்விழித்த மகேஷ், நர்ஸ்சிடம் கார்த்திக், ரேவதி எங்கே என்று கேட்க அவர்கள் வீட்டில் இன்று விசேஷம் என்பதால், அவர்கள் கிளம்பி விட்டார்கள். நீங்க எதை பற்றியும் கவலைப்படாமல் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். அப்போது, அனைத்தையும் யோசித்து பார்க்கும் மகேஷ், நாம ரேவதியை காதலிப்பது போல நடிச்சி ஏமாத்தினோம். இது எதுவுமே தெரியாத ரேவதி என் உயிரை காப்பாற்றி இருக்கிறாள். ரேவதியையாவது என்னை காதலித்தால், அதனால், நான் சாகக்கூடாது என்று நினைத்தால்.
ஆனால், கார்த்திற்கு நான் யார், எனக்கும் மாயாவிற்கும் என்ன உறவு என்பது தெரியும் அப்படி இருந்தும், என் உயிரை காப்பாற்றி இருக்கிறார் உண்மையில், அவர் ரொம்ப நல்லவராக இருக்கிறார். என்னால், இருவருமே சேர்ந்து வாழமல் இருக்கிறார்கள். எல்லா உண்மையையும் நான் ரேவதியிடம் சொல்லிவிட்டு, மாயாவை அழைத்துக்கொண்டு ஏதாவது ஒரு ஊருக்கு சென்றுவிட வேண்டும் என யோசித்து, அருகில் இருக்கும் ஒருவரிடம் ஃபோன் கேட்கிறான். இந்த நேரம் பார்த்து, சிவனான்டியின் அடி ஆள் ஒருவன் மகேசை பார்த்துவிடுகிறான். அவன், சிவனான்டிக்கு ஃபோன் செய்து, மருத்துவமனையில் மகேஷ் இருக்கிறான் என்ற விஷயத்தை சொல்கிறான்.உடனே சிவனான்டி அவன் எப்படி எங்கே வந்தான் என்பதை விசாரித்து சொல் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறான்.
உண்மையை சொன்ன மகேஷ்: மறுபக்கம், வீட்டில் ரேவதி தனியாக மகேஷ் பற்றியும் கார்த்திக் அவனை காப்பாற்றியது பற்றியும் யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது, மகேஷ், அருகில் இருப்பவரிடம் ஃபோனை வாங்கி நம்பரை டயல் செய்கிறான். ஆனால், ரேவதி எதையோ யோசித்துக்கொண்டு இருப்பதால், அவளுக்கு ஃபோன் வந்தது தெரியவில்லை. இதையடுத்து, ரேவதியின் தங்கை அங்கு வந்து, அக்கா ஃபோன் ரொம்ப நேரமாக அடித்துக்கொண்டு இருக்கு உனக்கு அப்படி என்ன யோசனை என்று கேட்க, ரேவதி ஃபோனை எடுத்து பேசுகிறாள். அப்போது, பேசிய மகேஷ் , ரேவதி என் உயிரை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி, நீ மட்டும் இல்லை என்றால் இன்னைக்கு நான் உயிருடனே இருந்து இருக்கமாட்டேன்.
நானும் மாயாவும் கணவன் மனைவி: இதுக்கு மேலயும் நான் உண்மையை சொல்லவில்லை என்றால், என் மனசாட்சியே என் கொன்றுவிடும். உண்மையில் டிரைவர் ராஜா ரொம்ப நல்லவன், நான் தான் உன்னை பொய்யாக காதலித்தேன், உன் சொத்துக்காகத்தான் காதலித்தேன் இந்த விஷயம் எல்லாம் ராஜாவிற்கு தெரியும், இதனாலத்தான் இந்த கல்யாணம் நடக்கூடாது என்று ரொம்ப கஷ்டப்பட்டார். உண்மையை உனக்கு புரிய வைக்க பார்த்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. உண்மையில் ராஜா நல்லவன் அவரை மட்டும் நம்பு, மாயாவை நம்பாதே, நானும் மாயாவும் கணவன் மனைவியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருந்தோம் என்று, எல்லா உண்மையையும் மகேஷ், ரேவதியிடம் சொல்லிக்கொண்டு இருக்கு, இதை அனைத்தையும் சிவனாண்டியின் அடி ஆள் ஓட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறான்.

கார்த்திக் மீது வந்த காதல்: அடுத்ததாக கார்த்திக் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக சொல்ல சாமுண்டீஸ்வரி செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கு நீங்களே பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறாள். அடுத்து சந்திரகலாவின் ஆளான செங்கல் சூலை மேனேஜர் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை பிடித்து கொண்டு தருவது கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது. உடனே அவன் வேலையாள் போல் மாறி மேனேஜரிடம் முழு சம்பளத்தை கேட்டு சத்தம் போடுகிறான். ஒரு கட்டத்தில் மேனேஜரை அடித்து விட அவன் சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் தன்னை அறைந்து விட்டதாக சொல்லி முறையிடுகிறான். மயில்வாகனம் கார்த்தி மீது தவறில்லை என நடந்ததை வீடியோவாக காட்ட சாமுண்டீஸ்வரி மேனேஜரை அடித்து விரட்டி கார்த்திக்கை பாராட்டுகிறாள். ரேவதி மகேஷ் விஷயத்தில் உங்க மேல தவறில்லை என்பதை புரிந்து கொண்டதாக சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். மேலும் மகேஷ் பற்றி நீங்க சொன்னதெல்லாம் உண்மை தானா என்று கேட்க போக உண்மை என்ன என்பது உங்களுக்கே புரியும் என்று சொல்கிறான்.
அடுத்து ரேவதிக்கு விசா ஆபிசில் இருந்து போன் வர அவள் கார்த்திக்குடன் கிளம்பி செல்கிறாள். சாமுண்டீஸ்வரிக்கு டாக்டர் மல்லிகா போன் செய்ய அவளும் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











