மனோகரின் தந்திர வலையில் சிக்கிய எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரியின் அப்பா, கிஷோர் என்பவரை அழைத்து வந்து இவர் தான் மாப்பிள்ளை என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பிறகு எழில், கிஷோர், சுடர், மனோகரி என நான்கு பேரும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட் கிளம்பி வருகின்றனர். மனோகரியையும் கிஷோரையும் ஒரு டேபிளில் உட்கார வைத்து விட்டு எழிலும் சுடரும் வேறு ஒரு டேபிளில அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றன.
எழிலும் சுடருடம் ஜாலியாக பேசிக்கொண்டு சாப்பிடுவதை பார்த்து மனோகரி கடுப்பாகி,மாப்பிள்ளை கிஷோர் மீது டீயை எடுத்து கொட்டி விட்டு அங்கிருந்து வந்துவிடுகிறாள். வீட்டிற்கு வந்ததும், ஓட்டலின் ஏன் அப்படி நடந்துகிட்ட என்று எழில் கேட்க, அந்த மாப்பிள்ளை சரியில்ல, உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசினான், அதனால் தான் அப்படி செய்தேன் என்று சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், மனோகரியை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் விடுகிறாள். இதனால், வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை தேடுகின்றனர். எழில் ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு விசாரிக்க அங்கும் மனோகரி வரவில்லை என்பது தெரிய வருகிறது. யாருக்கும் சொல்லாமல் மனோகரி எங்கே போனால் என்று அனைவரும் பதறிக்கொண்டு இருக்கின்றனர்.
காணாமல் போன மனோகரி: ஆனால், மனோகரி ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டு, அங்கிருந்து செல்விக்கு போன் போட்டு, நான் சொல்ற மாதிரி செய்யணும் என ரகசியமாக ஏதோ சொல்ல உடனே செல்வி போனை வைத்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு கீழே சென்று மனோகரி அம்மா லெட்டர் எழுதி வச்சுட்டு எங்கையே போயிட்டு இருக்காங்க என்று சொல்கிறாள. உடனே எழில், செல்வி, மனோகரி எங்கே இருக்கிறாள் உண்மையை சொல்லு என்று இடம் சத்தம் போட்டு கத்த, மனோகரி ஹோட்டலில் இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

மனோகரி போட்ட பிளான்: அதன் பிறகு எழில் ஹோட்டலுக்கு கிளம்பிச் செல்ல, செல்வி மனோகரிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் ஐயாவும் நம்பிட்டாரு என சொல்கிறாள். மேலும் ஹோட்டலுக்கு கிளம்பி வரும் விஷயத்தையும் சொல்கிறாள். அதே நேரத்தில் செல்வி பேசியதை சுடர் கேட்டு விடுகிறாள். அடுத்ததாக எழில் ஹோட்டலுக்கு வர ஜன்னல் வழியாக இதை பார்த்த மனோகரி போலீசுக்கு போன் போட்டு ஹோட்டலில் இல்லீகளாக சில விஷயங்கள் நடப்பதாக பொய் சொல்கிறாள்.
பிறகு எழில் மனோகரியின் ரூமுக்குள் வந்து எதுக்கு இப்படி பண்ண என்று பேசிக் கொண்டிருக்க மனோகரி அவனை கட்டிப்பிடித்து கண் கலங்கியபடி டிராமா போட போலீஸ் உள்ளே நுழைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











