ஏங்க இங்க வாங்க.. ‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்ற கூமாபட்டி தங்கபாண்டி.. நிஜத்தில் இணைந்த ஜோடி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரையில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிகழ்ச்சி 'சிங்கிள் பசங்க' இந்த நிகழ்ச்சி பல கட்டத்தை கடந்து இறுதிக்கடத்தை எட்டிய 5 போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இதில், கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் சாந்தினி ஜோடி டைட்டிலை வென்றுள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், பார்த்திபன், நடிகைகள் ஆலியா மானசா மற்றும் ஸ்ருதிஹா அர்ஜுன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இதில் இருந்து பார்த்திபன் மற்றும் ஸ்ருதிகா அர்ஜூன் விலகியதை அடுத்து புதிய நடுவராக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட டி ராஜேந்திரன் வந்தார். அதே போல சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி ரோலில் கலக்கி வந்த ஈஸ்வரி சீரியலில் இருந்து விலகி இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

சிங்கிள் பசங்க: இந்த நிகழ்ச்சியில், 'ஏங்க இங்க வாங்க' என்று பேசி சமூகவலை தளத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த கூமாப்பட்டி தங்கதுரை கலந்து கொண்டார். அவருக்கு ஜோடியாக பல சீரியல்களில் நடித்துள்ள நடி சாந்தினி கலந்து கொண்டார். தன்னுடைய தனித்துவமான கிராமிய நகைச்சுவையாலும், எதார்த்தமான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார் கூமாப்பட்டி தங்கதுரை. இந்த நிகழ்ச்சியில் பல ஜோடிகள் கலந்து கொண்ட போதும், ராவணன் மற்றும் ஆஷா கவுடர், ராகவேந்திரா மற்றும் பிரணிக்கா, சாந்தினி மற்றும் கூமாப்பட்டி தங்கதுரை போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி: இதில் குறிப்பாக சாந்தினி மற்றும் கூமாப்பட்டி தங்கதுரை இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லும் அளவுக்கு இருவரும் மிகவும் நெருக்கமாக அந்த நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல், பல பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வந்தனர். இறுதி கட்டத்தை எட்டிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இதில், டைட்டில் வின்னரான கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் சாந்தினி ஜோடி கோப்பையை தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை ராவணன் மற்றும் ஆஷா கவுடாவும் பெற்றனர். டைட்டிலை வென்ற கூமாபட்டி தங்கதுரைக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இணைந்த ஜோடி: இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னரப்பாக வந்த ராவணன் மற்றும் ஆஷா கவுடாவுக்கும் நிகழ்ச்சியில் ஜாதக பொருத்தம் பார்க்கப்பட்டது. இதில் இருவருக்கும் 10 பொருத்தமும் சரியாக இருப்பாக ஜோசியர் சொல்ல, இருவரும் மேடையில் மாலையில் மாற்றிக்கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்து கூறிய டி ராஜேந்தர், இந்த ரீல் ஜோடி மண வாழ்க்கையில் இணைய மனமாற வாழ்த்துகிறேன் கூறினார்.


Click it and Unblock the Notifications











