சர்வைவர் டைட்டில் வின்னரான விஜயலட்சுமி… ரூ.1 கோடியை வென்று சாதனை !

சென்னை : சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் விஜயலட்சுமி. அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Recommended Video

குடும்பத்துடன் Survivor பார்த்த Vijaylakshmi | Survivor Tamil, Nilan, Arjun Sarja

சர்வைவர் நிகழ்ச்சி 2000ம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்திருக்கிறது இந்த சர்வைவர்.

தமிழில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கினார்.

18 போட்டியாளர்களுடன்

18 போட்டியாளர்களுடன்

சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை காடர்கள்,வேடர்கள் என இரு குழுக்களாக களமிறங்கினர். 8வது வாரத்தின் போது அனைத்து போட்டியாளர்களும் ஒன்றிணைந்து கொம்பர்களாகினர். அடர்ந்த காட்டுக்குள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். இதில், தனக்கு தேவையான உணவு, தண்ணீர், நெருப்பு என அடிப்படையான தேவைகளையும் அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

சர்வைவர் போட்டி

சர்வைவர் போட்டி

இந்தப் போட்டியில் போட்டியாளர்களுக்குள் தங்களுக்குள்ளே 'சர்வைவர்' யார் என தேர்ந்தெடுக்கவும், நீக்கவும் ஓட்டுகள் வழங்க அனுமதியளிக்கப்படும். போட்டியில் கொடுக்கப்படும் கடினமான சவால்களை சமாளித்து இறுதியில் மிஞ்சும் ஒருவரே நிகழ்ச்சியின் சர்வைவர்.

டாப் 5 லிஸ்ட்

டாப் 5 லிஸ்ட்

100 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், டாப் 5 லிஸ்டில் விஜயலட்சமி, வானேசா, சரண்,உமாபதி,நாராயணன் ஆகியோர் இடம் பிடித்தனர். இதில் பைனலிஸ்ட்டுக்கான போட்டியில் வெற்றி பெற்று முதல் பைனலிஸ்ட்டாக இடம் பிடித்தார் விஜி. அவருக்கு கிடைத்த சலுகையை பயன்படுத்தி வானேசாவை 2வது போட்டியாளராக உடன் அழைத்துச் சென்றார். 3வது பைனலிஸ்ட்டுக்கான போட்டியில் சரண் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிவரை

இறுதிவரை

இறுதிப்போட்டியில் விஜலட்சுமி, சரண்,வானேசா ஆகியோர் இருந்தனர். விக்ராந்த், இனிகோ, நந்தா, அம்ஜித், உமாபதி, ஐஸ்வர்யா, நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓட்டுபோட்டு சர்வைவர் டைட்டில் வின்னரை தேர்வு செய்ய வேண்டும்.

விஜயலட்சுமி டைட்டில் வின்னர்

விஜயலட்சுமி டைட்டில் வின்னர்

இதில் அதிக வாக்குகளைப் பெற்ற சிங்கப்பெண், விஜயலட்சுமி சர்வைவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த மகிழ்ச்சியான தகவலை அர்ஜுன் அறிவித்தார். அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தன்னத்தனி தீவில் 90 நாட்கள் பெரும் சவாலான டாஸ்குகனை செய்து அசத்திய விஜயலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X