யாருமற்ற தனித் தீவில்.. நீங்களும் நானும் மட்டும்.. செம கேம் ஷோ.. ஜீ தமிழில்.. "சர்வைவர்"!
சென்னை : ஜீ தமிழ் சேனல் பிரம்மாண்டமாக எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு "சர்வைவர்" என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த கேம் ஷோ போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இது மற்ற கேம் ஷோக்கள் போல் இல்லாமல் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் நடுத்தீவில் நடைபெறுவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.

சர்வைவர்
ஜீ தமிழ் தொலைக்காட்சி பல வித்தியாசமான தொடர்களையும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடித்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரம்மாண்டமான எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 'சர்வைவர்' என்ற பெயரில் ஆளில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

புது கேம் ஷோ
அந்த தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். உணவு, தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

டாஸ்குகள்
அதில் போட்டியாளர்களின் நம்பத்தன்மையும், போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். இதில் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் போட்டியாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

விரைவில் அறிவிப்பு
கொரோனா தொற்று குறைந்ததும், விமானப் போக்குவரத்தில் சிக்கல்கள் தீர்ந்த பிறகே போட்டியாளர்கள் தங்கும் தீவை முடிவு செய்ய இருக்கிறார்கள். இதில் இடம் பெரும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விட்டது. யார் யார் இதில் இடம் பெறுகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

பேச்சுவார்த்தை
பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இன்னும் சில நாளில் இதுகுறித்து முழுவிவரமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











