twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ தமிழ் சேனலில் ஜூலை 27 முதல் புதிய எபிசோட்கள்..மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

    |

    சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஜூலை 27 முதல் புதிய எபிசோட்களை காணுங்கள் என்று இப்போதே ப்ரமோ போடத் தொடங்கி விட்டன. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாடு முழுவதும் மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

    அப்போ அமெரிக்க அதிபர் கனவு? கன்யேவை இப்படி கலங்க விட்டுட்டாரே கிம் கர்தாஷியன்.. விவாகரத்தா?அப்போ அமெரிக்க அதிபர் கனவு? கன்யேவை இப்படி கலங்க விட்டுட்டாரே கிம் கர்தாஷியன்.. விவாகரத்தா?

    ஜூலை 27 முதல்

    ஜூலை 27 முதல்

    ஜீ தமிழ் வாடிக்கையாளர்கள் இனி புதிய எபிசோட்களை எதிர்பார்க்கலாம். ஜூலை 27 முதல் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பயணங்களை மீண்டும் தொடர்ந்து கண்டுகளிக்கலாம். கடந்த பத்தாண்டுகளில், ஜீ தமிழ் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களுடன் நெருக்கமாகி, அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் ஆழமான ஈடுபாட்டை செலுத்தி வந்துள்ளனர். ஜீ தமிழ் சேனல், பார்வையாளர்களை மகிழ்விக்கும் தன்னுடைய முன்மாதிரியான அர்ப்பணிப்புக்கு ஏற்ப, புத்தம் புதிய எபிசோட்களை வழங்க இருக்கிறது.

    பாதுகாப்பு நிச்சயம்

    பாதுகாப்பு நிச்சயம்

    பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொடரில் தாங்கள் நேசிக்கும் கதாபாத்திரங்களின் புதிய தருணங்களை பார்த்து மகிழலாம். பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கும் முயற்சியாக, ஜீ தமிழ் ‘இதயத்தால் இணைவோம், இதையும் கடப்போம்' எனும் ஸ்லோகனுடன் தன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்குகிறது. இதன் ஸ்லோகனின் பொருள் - நாம் மனதால் ஒன்றிணைந்து, இந்த சூழ்நிலையையும் கடந்து வருவோம் என்பதாகும்.

    படப்பிடிப்புகள் தொடக்கம்

    படப்பிடிப்புகள் தொடக்கம்

    சேனல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் அதேசமயம் ஜீ தமிழ் செட்டில் உள்ள அனைத்து பணியாளர்கள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு முன்னர், செட்களை சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் பாதுகாப்பு நிபுணர்களின் குழு வரவழைக்கப்படுகிறது. இது படப்பிடிப்புக்கு முன்னால் நடத்தப்படும் 9 மணி நேர செயல் முறையாகும். அபாயங்களை குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு ஒன்றும் வரவழைக்கப்படுகிறது.

    தெர்மல் ஸ்கிரீனிங்

    தெர்மல் ஸ்கிரீனிங்

    ஒவ்வொரு நாளும் செட்டில் நுழையும் முன்னாலும், வெளியேறும் முன்னாலும், நடிகர்கள் மற்றும் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாய தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பப் பரிசோதனை) செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் அதிகபட்சமாக 60 நபர்கள் இருக்கும் மூடப்பட்ட சூழலில் உட்புறத்தில் மட்டுமே படப்பிடிப்புகள் நடைபெறும்.

    சொந்த மேக் அப்

    சொந்த மேக் அப்

    சோப்புகள், சானிட்டைஸர்கள், கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் கொண்ட பாதுகாப்பு கருவிகள் செட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன. செட்டில் கேமராவுக்கு முன்னால் இல்லாதபோது, நடிகர்கள் கட்டாயமாக மாஸ்க்குகளை அணிவார்கள். ஆபத்து காரணிகளை மேலும் குறைப்பதற்காக, குழுவினர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு இடையே தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பதற்காக நடிகர்கள் தாங்களே சொந்தமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். சுகாதாரமான சூழலில் சமைக்கப்பட்ட உணவுக்காகவும் செட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நியூ டைமிங்

    நியூ டைமிங்

    ஜூலை 27 முதல், தொலைக்காட்சி தொடர்கள் வாரத்தின் ஆறு நாட்களிலும் புதிய நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளன. ரெட்டை ரோஜா மதியம் 1:30 - 2:00 மணிக்கும், என்றென்றும் புன்னகை - 2:00 - 2:30மணிக்கும், பிற்பகல் ராஜா மகள் 2:30 முதல் 3:00 மணிக்கும், நீதானே எந்தன் பொன்வசந்தம் இரவு 7:00 முதல் 8:00 மணிக்கும், கோகுலத்தில் சீதை - 8:00 - 8:30 மணிக்கும், யாரடி நீ மோகினி இரவு 8:30 முதல் 9:00 மணி வரைக்கும், மக்களின் பேராதரவு பெற்ற செம்பருத்தி வழக்கமாக ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் அதாவது 9:00 முதல் 9:30 மணிக்கும், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி 9:30 - 10:00 மணிக்கும் இறுதியாக சத்யா நெடுத்தொடர் 10:00 - 10:30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

    புது முயற்சி

    புது முயற்சி

    "ஊரடங்கு உத்தரவின் போது, ஜீ தமிழ் சேனல் அதன் பார்வையாளர்களுக்கு புதுமையான மற்றும் கவரும்படியான நிகழ்ச்சிகளை அளிக்க மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது படப்பிடிப்புகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதும் எங்கள் பார்வையாளர்களுக்கும் அவர்களுக்கு பிடித்த நட்சத்திரங்களுக்கும் இடையே தொடர்ச்சியான இணைப்பை ஏற்படுத்த உதவும்.

    நிதி உதவி வழங்க முயற்சி

    நிதி உதவி வழங்க முயற்சி

    இந்த நேரத்தில் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புத்தம் புதிய மற்றும் அற்புதமான புதிய நிகழ்ச்சிகளை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்", என ஜீ எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான சிஜு பிரபாகரன் கூறினார். ஊரடங்கு காலத்தில், தொலைக்காட்சித் துறையை சார்ந்த கிட்டத்தட்ட 400 தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்காக நிதி உதவி வழங்க சேனல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    English summary
    Zee Tamil TV has announced that new episodes from July 27
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X