கார்த்தி மடியில் ரேவதி.. இரவில் நடந்த ரொமான்ஸ்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், வீட்டிற்குள் வந்த கார்த்திக்கை வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறாள் சாமுண்டீஸ்வரி அதுமட்டுமில்லாமல், மேஜையில் மீது உங்காந்து சாப்பிடக்கூடாது என்று சொல்லி கீழே அமர்ந்து சாப்பிட சொல்கிறாள். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கீழே வந்து கார்த்திக்குடன் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா ஆகியோர் மட்டும் தனியாக மேஜையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
பிறகு நைட் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக், ரேவதி இரண்டு ஒன்னா சேர்ந்து தூங்கக்கூடாது. அப்படி அவர்கள் ஒன்றாக சேர்த்து தூங்கினால் நிச்சயம் ஏதாவது தவறு நடந்துவிடும், அவர்கள் சேராமல் பார்த்துக்கோ என்று சொல்ல கார்த்திக் சோபாவில் படுப்பதற்காக பெட்ஷீட் , தலையணை என ஆளுக்கு ஒரு பொருளாக எடுத்து வந்து கொடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து மயில்வாகனம் ஒரு பொம்மையை தூக்கி போட்டு சந்திரகலாவை திசை திருப்பி சந்திரகலாவை ரூமுக்குள் அனுப்புகிறான்.

கார்த்திகை தீபம் : இதையடுத்து, அதாவது, மயில்வாகனம் ஒரு பொம்மையை தூக்கி போட்டு சந்திர கலாவை திசை திருப்ப ரேவதி ஓடிவந்து கார்த்தியின் மடியில் தலை வைத்து படித்து விடுகிறாள். சந்திரகலா உன்னையும் அவனை தான் தனித்தனியாக தூங்க சொன்னாங்களா என்று சத்தம் போட கார்த்தி என்னோட புருஷன் நான் இங்கதான் தூங்குவேன் என்று ரேவதி பதிலடி கொடுக்கிறாள். பிறகு சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை அழைத்து வர அவளும் சத்தம் போட ரேவதி கோர்ட் ஆர்டர் படி இன்னமும் நாங்க புருஷன் பொண்டாட்டி தான் என பதிலடி கொடுக்க சாமுண்டீஸ்வரி பதில் பேச முடியாமல் வாடி என்று சந்திரகலாவை அழைத்து கொண்டு செல்கிறாள்.
கார்த்தியின் மடியில் ரேவதி: அடுத்து ரோகினி வயிறு வலியில் தவிக்க கார்த்திக், மயில்வாகனம் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர் பரிசோதனை செய்து பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல என்று சொல்கின்றார். அதன் பிறகு இவர்கள் வீட்டுக்கு வர சந்திரகலா இதை பார்த்து சாமுண்டீஸ்வரிக்கு சொல்ல கார்த்திக் ரோகினிக்கு உடம்பு சரியில்லை.. அதனால் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றதாக சொல்கிறான். அடுத்து கான்ஸ்டபிள் பேத்தியை சந்தித்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியின் அம்மா பத்தி ஏதாவது சொன்னார்களா என்று விசாரிக்க தாத்தா அதை பத்தி ஒன்னும் சொன்னது இல்ல.. பக்கத்து ஊர்ல அரசியல்வாதி பரமேஸ்வரினு ஒருத்தவங்க இருக்காங்க அவங்ககிட்ட சொல்லி இருப்பாரு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











