செம்பருத்தி… ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஒன்றிணையும் சீரியல்கள்… ஜீ தமிழ் டிவியின் மகா சங்கமம் !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சி செம்பருத்தி மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரை ஒன்றாக இணைந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.
பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பான ஒரு மணிநேர தொடராக இந்த மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜூன் 12 தொடங்கி இரண்டு வார காலத்திற்கு இந்த மகா சங்கமம் ஒளிபரப்பாகும்.

பொழுதுபோக்கு சேனல்
ஜீ தமிழ் தொலைக்காட்சி பல திரைப்படங்களையும், சுவாரசியமான பல தொடர்களையும், கேம் ஷோக்களையும் ஒளிபரப்பி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளது. விறுவிறுப்பான கதைகளும் , அற்புதமான நடிப்பும் ஜீ தமிழ் தொலைக்காட்சியை தமிழ் பொழுதுபோக்கு சேனல்களில் முதன்மையான ஒன்றாக மாற்றியுள்ளது.

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி தொடர் அனைவரின் விருப்பத் தொடராக இருந்தது. இத்தொடரில் வரும் ஷாபனா மற்றும் கார்த்திக் ராஜ் இருவரின் ஜோடியை அனைவரும் ரசித்தனர். இத்தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் வெளியேறியதை அடுத்து இத்தொடர் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், ஜீ தமிழ் தொலைக்காட்சி புது ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது டிண்டிங்கில் இருக்கும் செம்பருத்தி மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரை ஒன்றாக இணைந்து மகா சங்கமம் ஆகி உள்ளது.

தினமும் ஒரு மணிநேரம்
மக்களின் மனம் கவர்ந்த இவ்விரு தொடரின் கதாபாத்திரங்கள் ஒன்றாக திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்க உள்ளனர். இந்த சாதனை சங்கமம் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் இரவு 9.30 மணி முதல் 10.30 வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.

சுவாரசியம்
இந்த மகா சங்கமத் தொடரில் ராசாத்தியும், இனியனும் அகிலாண்டேஸ்வரியை சந்திக்கின்றனர். இதில் ராசாத்தி தனது நிர்வாகத் திறமையால் அகிலாண்டேஸ்வரியின் மனதை கவர்ந்து மனதில் இடம் பிடிக்கிறாள். மேலும் அகிலாண்டேஸ்வரியின் உயிருக்கும் வரும் ஆபத்தையும் தவிடுபொடியாக்குகிறாள் என்பதை சுவாரசியமான விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











