Vijay: வேலூரில் அழுத விஜய்.. அரசியலில் நாகரீகம் அவசியம்.. வைரலாகும் சீரியல் நடிகை லட்சுமியின் வீடியோ

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் மிகவும் எமோஷனலாகி அழவும் செய்தார். இது விஜய் ரசிகர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இது மட்டும் இல்லாமல், பலரும் நீங்க அழ வேண்டாம் என்று எல்லாம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சீரியல் நடிகை லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் அழுதது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது அவரது வீடியோவில், " விஜய் சார் உங்களது சமீபத்திய அரசியல் பேச்சுக்களை நான் நன்கு கவனித்து வருகிறேன். அவை எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்களது வாக்குறுதிகள் குறித்து நான் தனி வீடியோவே போடலாம் என்று இருக்கிறேன். விஜய் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இனி வரும் காலங்களில் நீங்கள் பேசும் போது அழ வேண்டாம். உங்களுடைய பலத்தை எதிரிக்கு காட்டுங்கள். உங்களது பலமே போதுமானது அவர்களை வீழ்த்த, எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் பலவீனத்தை காட்ட வேண்டாம்.

Zee Tamil Veera Serial Actress Lakshmi Reacts to Vijay s Emotional Speech at Vellore Meeting
Photo Credit:

இரண்டாவதாக ஒரு நடிகன் அழும்போது, நடிகன் நல்லா நடிக்கத்தானே செய்வான் என்று சொல்லிவிடுவார்கள். எடுத்த உடனே யாரும் ஒரு பதவியை எளிதில் அடைந்துவிட முடியாது, நிறைய போராட வேண்டும், நிறைய அம்புகளைத் தாங்க வேண்டும், நிறைய அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும், அதன் பின்னர் தான் நினைத்த இடத்தை அடைய முடியும். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்.

நாகரீகமான அரசியல்: அடுத்ததாக, அரசியல்வாதிகளின் அநாகரீக பேச்சுக்கள், தயவு செய்து இனியாவது அரசியல்வாதிகள் அநாகரீகமாக பேசுவதை நிறுத்த வேண்டும். 2026 மிகவும் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த அரசியல் பேச்சுக்கள் மட்டும் அதள பாதாளத்தில் அப்படியே உள்ளது. நாகரீகமற்ற, மோசமான, உருவக்கேலி செய்யக்கூடிய, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடிய, மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது என இப்படியே தான் இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, நாகரீகமான அரசியல் என்பதை வார்த்தைகளில் மட்டும் பயன்படுத்தாமல், செயலிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

நம்பிக்கை: இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும், தேர்தல் மீதும் நம்பிக்கை வரும். அடுத்ததாக மக்களுக்கு, மக்களைப் பொறுத்தவரை ஒரு மாற்ற வரவேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். ஆனால் அதற்கு மக்கள் தான் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். யார் வந்து பதவியில் அமர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற தெளிவு நம்மகிட்ட இருக்கனும். கேப்டன் விஜயகாந்த் இருந்தவரை வெகு சிலர் மட்டும் தான் அவரை ஒரு நல்ல தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைக்கு அவரை எல்லோரும் மிஸ் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

Zee Tamil Veera Serial Actress Lakshmi Reacts to Vijay s Emotional Speech at Vellore Meeting
Photo Credit:

மக்கள்: நன்றாக பேசுபவர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் கிடையாது, அவர்கள் வெறும் பேச்சாளர்கள் மட்டும் தான். ஒரு தலைவனுக்கு பேசத் தெரியவேண்டும் என்று இல்லை. இங்கு பேசத் தெரியாத எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு காமராஜர் ஐயாவை கூறலாம். பேச்சை பார்த்து ஏமாற வேண்டாம், இலவசங்களுக்கு விலை போகவும் வேண்டாம். மக்களைப் பொறுத்தவரை தரமான கல்வி, சரியான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுங்க. அதன் பின்னர் அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். நாம் இலவசமாக கொடுத்துவிட்டு அதன் பின்னர் ஒசியில் போகிறவர்கள் தானே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு தொடர்பான விடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X