மருதுதான் ‘ரெட்’ என்பதை கண்டுபிடித்த கார்த்திக்.. ரேவதி கழுத்தில் விழுந்த மாலை.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர அங்கு மருது(ரெட்டால்) பாதிக்கப்பட்ட பெண்மணி தற்கொலைக்கு முயற்சி செய்து கோமா ஸ்டேஜில் இருக்க அவளது அம்மா நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் கார்த்திக் 'ரெட்'டை கையும் களவுமாக பிடிக்க திட்டம் ஒன்றை தீட்டுகிறான். ரெட்டுக்கு போன் செய்து ஹாஸ்பிடல் செலவுக்கு மட்டும் பணத்தை கொடுங்க என்று கேட்க அவனும் சம்மதம் தெரிவித்து சந்திக்க ஓகே சொல்கிறான்.

மறுபக்கம் இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்ய ரேவதி என்னை திடீர் திடீர்னு பூஜைனு சொல்றீங்க என்று கேள்வி கேட்க ராஜராஜனும் எதுக்கு இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். முன்னாடியே சொன்ன தடுத்து நிறுத்திடுவீங்க அதுக்கு தான் கடைசி நேரத்துல சொல்றோம் என சொல்கிறாள். ரோகிணி இப்ப மட்டும் இந்த பூஜை நடக்கவா போகுது என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொள்ள சாமுண்டீஸ்வரி என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை என சமாளிக்கிறாள். ரோகிணி எப்படியும் எம்டி வருவாரு பாரு என்று ரேவதியை கலாய்க்கிறாள்.

zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், அதாவது சாமுண்டீஸ்வரி வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க சாமியார் வீட்டுக்கு வருகிறார். மறுபக்கம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவளது அம்மாவும் 'ரெட்'டை பார்க்க ஒரு குடோனுக்கு வருகின்றனர். மருது மாஸ்க் அணிந்து கொண்டு ரெட்டாக இந்த குடோனுக்கு வருகிறான். அந்த பெண்ணுக்கும் மருதுக்கும் இடையே வாக்குவாதம் உருவாக பிறகு போலீசை அழைக்க போலீஸ் அங்கு வர மருது அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான். முகத்தை மறைத்துக் கொண்டு மருது அங்கிருந்து எஸ்கேப் ஆக கார்த்தி ஏற்பாடு செய்து வைத்திருந்த பெயிண்ட் அவன் மீது கொட்டுகிறது. கார்த்திக்கு அது மருதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

zee tamil Karthigai Deepam Serial

மருது தான் 'ரெட்': இங்கே சாமுண்டீஸ்வரி மருதுவை அழைத்து வருவதற்காக கையில் மாலையுடன் மேலே வர மருதுவின் ரூமுக்குள் கார்த்திக் நுழைகிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி கையில் இருந்த மாலை பறந்து போய் ரேவதி கழுத்தில் விழுகிறது. அடுத்ததாக கார்த்திக் மருதுவை பார்க்க அவனுக்கு ரூமுக்கு வர அவன் கையில் கொஞ்சம் பெயிண்ட் ஒட்டி இருக்க அவன் தான் அந்த ரெட் என்ற உண்மையை கார்த்திக் கண்டுபிடிக்கிறான். ஆனால், எதையும் காட்டிக் கொள்ளாமல் சும்மா பார்க்க வந்ததாக சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறான். கார்த்திக் இந்த பங்ஷனுக்கு வந்திருப்பதை பார்த்த ரோகினி ரேவதியிடம் கார்த்திக் உன்ன காதலிக்கிறார் போல என சொல்லி கலாய்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X