சீதாவின் அக்காவிடம் மயங்கும் ராம்.. சீதா கழுத்தில் மாலை.. முதல் நாளிலேயே சீதாராமன் தொடரில் ட்விஸ்ட்!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது சீதாராமன் தொடர்.
இந்தத் தொடரில் பிரியங்கா சீதாவாகவும் ராமாக ஜூஜியும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் காதலை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

சீதாராமன் சீரியல்
ஜீ தமிழ் சேனல் அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் பிரியங்கா மற்றும் ஜூஜி, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் சீதாராமன் என்ற புதிய தொடர் இன்றுமுதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரியங்கா சீதாவாகவும் ஜூஜி ராமாகவும் நடிக்கவுள்ளனர்.

தினந்தோறும் ஒளிபரப்பு
இன்றுமுதல் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராமின் அம்மாவாக ரேஷ்மா பசுபுலேட்டி மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார். அவர் தனது மகனுக்கென சீதாவின் அக்கா மதுமிதாவை பெண் பார்க்கிறார். ராமும் மதுமிதாவின் அழகில் மயங்குகிறார்.

சீதாவிற்கு நன்றி சொல்லும் ராம்
இந்நிலையில் குலசேகர பட்டினம் கோயிலுக்கு வரும் ராமை, பார்க்கும் சீதா, அந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டால் அவருக்கு நல்ல மனைவி கிடைப்பாள் என்று கூறுகிறார். அதேபோல, மதுமிதாவை பார்க்கும் ராம், இதற்காக சீதாவிற்கு நன்றி கூறுகிறார். தொடர்ந்து தன்னுடைய நன்றியை கூறும்வகையில், கையில் உள்ள மாலையை சீதாவின் கழுத்தில் போடுவதாக முதல் நாள் எபிசோட் காணப்படுகிறது.

மகனுக்காக பெண்பார்க்கும் மகாலட்சுமி
முன்னதாக, தன்னுடைய மகனுக்கு பார்க்கும் பெண்ணிற்கு காயம் ஏற்பட, தன்னுடைய மகனுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத பெண்தான் வேண்டும் என்று அவளை நிராகரிக்கிறார் மகாலட்சுமி. இந்நிலையில்தான் சீதாவின் அக்கா மதுமிதாவை பார்த்து தன்னுடைய மகனுக்காக அவரை தேர்ந்தெடுக்கிறார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ப்ரமோ
இவ்வாறு இருக்கையில் அடுத்தடுத்து கதைக்களம் எப்படி போகும் என்பது குறித்து முதல் நாள் எபிசோடே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சன் டிவியின் முக்கியமான தொடரில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா, இந்தத் தொடரில் எப்படி ரசிர்களை தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் ஈர்ப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களை கவருமா?
சன் டிவி, விஜய் டிவி வரிசையில் தற்போது ஜீ தமிழும் புத்தம் புது சீரியல்களை களமிறக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த பிரியங்காவை லீட் கேரக்டரில் வைத்து உருவாகியுள்ள சீதாராமன் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











