ஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை!
சென்னை: சமீப காலங்களில் 24×7 திரைப்படங்களுக்காக மட்டுமே தனியாக சேனல் தொடங்கப்பட்டு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது.
அந்த வகையில் Zee திரை தொலைக்காட்சி தமிழில் குறுகிய காலத்தில் நிறைய பார்வையாளர்களை கவர்ந்து வளர்ந்து வரும் தொலைக்காட்சியாக உள்ளது.
இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் ஜூன் மாதத்தில் நல்ல படங்களை ஒளிபரப்பவுள்ளது Zee திரை.

விருதுகளை வென்றார்
நாளை (ஜூன் 4) மறைந்த பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் பிறந்தநாளை முன்னிட்டு கிளாசிக் திரைப்படமான சங்கராபரணம் திரைப்படம் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த படம் S.P. பாலசுப்பிரமணியம் கேரியரில் முக்கியமான படமாகும். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடி அதற்காக சில விருதுகளையும் வென்றுள்ளார் S.P. பாலசுப்பிரமணியம்.

மனதை இதமாக்கும்
ஜூன் 13ம் தேதி மதியம் 1 மணிக்கு ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, ஆர்ஜே விக்னேஷ் நடித்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் ஷான் ரோல்டனின் மெல்லிய இசையுடன் மனதை இதமாக்கும் காதல் திரைப்படமாகும்.

Array
ஜூன் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு ஆர்யா, அனுஷ்கா நடித்த ப்ளாக் பஸ்டர் படமான இஞ்சி இடுப்பழகி திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த படத்திற்காக அனுஷ்கா மிகவும் கஷ்டப்பட்டு தனது உடல் எடையை ஏற்றி நடித்திருப்பார். இந்த படத்திற்காக அனுஷ்கா பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

த்ரில்லர் திரைப்படம்
ஜூன் 27ம் தேதி மாலை 3:30 மணிக்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில், ரஹ்மான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. த்ரில்லர் திரைப்படமான இது வெளியானது முதல் இப்போது வரையிலும் சலிப்பு தட்டாமல் பார்த்து ரசிக்க கூடிய வகையில் உள்ள படமாகும்.
Recommended Video

சினிமா ரசிகர்களுக்காக
மேலும் சினிமா ரசிகர்களுக்காக Zee திரை கடந்த ஆண்டு ஜாக்கி சான் நடிப்பில் வெளியாகிய Vanguard திரைப்படத்தை ஜூன் 20ம் தேதி மதியம் 12மணிக்கு ஒளிபரப்பவுள்ளது. இதுமட்டுமின்றி சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையும் Zee திரை ஒளிபரப்பு செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications











