Jana Nayagan: ஜன நாயகனை இந்த டிவியில் பார்க்கலாம்.. சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சேனல் எது தெரியுமா?
சென்னை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். விஜய் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ சேனல் கைப்பற்றி உள்ளது. இது தொடர்பாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு விஜய்க்கு ரூபாய் 225 கோடிகள் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமம் ஜீ சேனலுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜன நாயகன் ஜனவரி 9ஆம் தேதி முதல் என்று எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தியேட்டரிக்கல் உரிமம்: அதேபோல், படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் குறித்தும் படக்குழு தெரிவித்திருந்தது. அதாவது, கோவை, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி எஸ் பிக்சர்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளை ஃபைவ்ஸ்டார் செந்திலுக்கு விற்பனை செய்துள்ளார்கள். சென்னை ஏரியாவை சினிமாகாரனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவை ஒயிட் நைட்ஸ் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவை எஸ்.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்தது.

அதேபோல் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 120 கோடிகளுக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ சேனல் வாங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











