'தல' மகள் ஆளு தான் குட்டி ஆனால் பாட்டு பாடுவதில் கெட்டி: நடிகர் புகழாரம்
மும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவா பாட்டு பாடுவதில் கெட்டிக்காரி என்று பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் அப்பாவாக நடித்தவர் அனுபம் கேர். அவர் அண்மையில் டோணியின் வீட்டிற்கு சென்றார்.
டோணி மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார்.

மகள்
டோணியின் அப்பாவை சந்தித்து பேசினார் அனுபம் கேர். அவர் அங்கு சென்றிருந்தபோது டோணியின் மகள் ஜிவா தனது மழலை குரலில் பாட்டு பாடி காண்பித்துள்ளார்.

தேசிய கீதம்
ஜிவா ஒரு ஜீனியஸ். இந்த வயதில் அந்த குழந்தை என்ன அருமையாக பாடுகிறாள். நம் தேசிய கீதத்தை அவ்வளவு அழகாக பாடுகிறாள். கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார் அனுபம் கேர்.

வீடியோ
டோணியின் செல்ல மகள் ஜிவா மலையாள பாடல் ஒன்றை அழகாக பாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகள்
டோணியின் மனைவி சாக்ஷி தனது மகள் ஜிவாவை அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











