யாரு யாரை மிரட்டுவது, ஹய்யோ ஹய்யோ: சிரிக்கும் திரையுலகம்
மும்பை: பிக் பாஸ் வீட்டில் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனக்கே உரிய பாணியில் மன்னிப்பு கேட்டுள்ளார் சல்மான் கான். சல்மானை நாய் போன்று ஆக்கி அவரின் சினிமா வாழ்க்கையை அஸ்தமனம் செய்யப் போவதாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து வருகிறது. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாள் ஒன்றுக்கு அவருக்கு ரூ. 11 கோடி சம்பளம் அளிக்கப்படுகிறதாம்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜுபைர் கான் என்பவர் கெட்ட வார்த்தை பேசினார்.

நாய்
போட்டியாளர் கெட்ட வார்த்தை பேசியதை பார்த்த சல்மான் கான் கோபம் அடைந்து ஜுபைரை விளாசினார். அப்போது சல்மான் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

வழக்கு
சல்மான் திட்டியதால் ஜுபைர் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சல்மான் மீது போலீசில் புகார் அளித்தார் ஜுபைர். மேலும் சல்மானின் சினிமா கெரியரை அழிக்கப் போவதாக மிரட்டினார்.

பேச்சு
தன்னை நாய் என்று திட்டியதற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஜுபைர். சல்மானை நாய் போன்று ஆக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார் அவர்.

நாய்கள்
ஜுபைரின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆளா சல்மான். ஜுபைர் பற்றி பிக் பாஸ் வீட்டில் சல்மான் கூறியதாவது, கடந்த வாரம் நான் நாய் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். நாய்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

சிரிப்பு
ஜுபைர் கான் தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனா பார்க்கரின் மருமகன் என்று கூறப்படுகிறது. ஜுபைரின் மிரட்டலுக்கு எல்லாம் சல்மானாவது பயப்படுவதாவது என்று சிரிக்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











